Latest News
Home / விளையாட்டு (page 6)

விளையாட்டு

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை எளிதாக வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 184 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில், இலங்கை கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது. பல்லேகல மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் …

மேலும் வாசிக்க

அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இலங்கை!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் …

மேலும் வாசிக்க

இலங்கை அணியின் அடுத்த போட்டிகள் குறித்த SLC யின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி 20 ஆம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

பாகிஸ்தான் சென்ற சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதி

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று (18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கான இமாலய வெற்றி இலக்கு!

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை குவித்துள்ளது. போட்டியில் அவ்வணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சீன் கொலின் வில்லியம்ஸ் 9 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அதேபோல் ரெஜிஸ் சகப்வா 81 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு …

மேலும் வாசிக்க

தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஒரு நாள், ரி20 போட்டிகளில் தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

மேலும் வாசிக்க

19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் 14ஆவது 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. இதில் இலங்கை, இந்தியா, நடப்பு சம்பியன் பங்களாதேஷ் உட்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் …

மேலும் வாசிக்க

மீண்டும் அணியுடன் இணைந்த பானுக..!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ மாற்றிக் கொண்டுள்ளார். முன்னதாக, பானுக ராஜபக்ஷ தனது பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். எவ்வாறாயினும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கும் பானுக ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று (12) அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

பலம் வாய்ந்த இரு வீரர்கள் இல்லாமல் விளையாடப்போகும் இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் பலம் வாய்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க