Latest News
Home / விளையாட்டு (page 11)

விளையாட்டு

தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ்- டிக்வெல்லவுக்கு ஓராண்டு தடை: 10 மில்லியன் ரூபாய் அபராதம்!

இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மூன்று வீரர்களுக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆறு மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உயிர் குமிழியை மீறியதற்காக, இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், தொடரின் இடைநடுவே இவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். …

மேலும் வாசிக்க

ஹசரங்கவின் அதிரடி பந்து வீச்சில் திணறிய இந்திய அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதன்படி, இலங்கை அணிக்கு 82 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. …

மேலும் வாசிக்க

T20 தொடருக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் !

ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். T20 சர்வதேச தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (புதன்கிழமை) சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி 720 புள்ளிகளுடன் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் தென்னாபிரிக்க அணியின் வீரர் தப்ரெஸ் ஷம்ஸி 792 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். முன்னர் இரண்டாவது இடத்தில் …

மேலும் வாசிக்க

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு

இலங்கைக்கு அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மற்ற வீரர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் போட்டி நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கம் சீனாவிற்கு – இலங்கைக்கு ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர் தகுதி பெற்றனர். இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் 251.8 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன்மூலம் சீனா டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. இரண்டாவதாக, ரஷ்யாவைச் …

மேலும் வாசிக்க

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா அணியிடம் வீழ்ந்தது இலங்கை அணி!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

ரி-20 உலகக்கிண்ண தொடர்: இரசிகர்கள் எதிர்பார்த்த குழு விபரம் வெளியீடு!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரி-20 உலகக்கிண்ண தொடரில், எந்தெந்த அணிகள் எந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளன என்பதை தெளிவுப்படுத்தும் குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. குழு ஒன்றில் நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் தகுதி சுற்றுப் போட்டிகளில் தேர்வாகும் இரு அணிகள். குழு இரண்டில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றுப் போட்டிகளில் தேர்வாகும் இரு …

மேலும் வாசிக்க

எஞ்சலோ மெத்திவ்ஸ் விடுத்துள்ள கோரிக்கை…

முன்னாள் இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மெத்திவ்ஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் நாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் வினவினோம். அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரி ஒருவர், ´ சர்வதேச போட்டிகளில் தற்காலிகமாக தனது பெயரை சேர்க்க வேண்டாம்´ என மெத்திவ்ஸ் கேட்டுள்ளதாக கூறினார். …

மேலும் வாசிக்க

பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடகாலத்திற்கு குறித்த போட்டித் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவருக்கு 5000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்கள் ஊடாக ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டதை அடுத்து தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. போட்டியில் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் நடுவர்களால் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி …

மேலும் வாசிக்க