Latest News
Home / உலகம் (page 6)

உலகம்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, நாளாந்தம் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், …

மேலும் வாசிக்க

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் – WHO

ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்தாலும் அது குறித்து மக்கள் அலட்சியம் கொள்ளக்கூடாது என்றும் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரோன் பரவல் …

மேலும் வாசிக்க

இந்திய முதல்வர் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் …

மேலும் வாசிக்க

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!

குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணைகளை ஏர் மார்ஷல் மகேந்திர சிங் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரின் கருப்பு …

மேலும் வாசிக்க

வட கொரியா 2022 இல் பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தும் – கிம்

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இந்த ஆண்டு தேசிய முன்னுரிமையாக இருக்கும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சியின் முக்கிய கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறம் இருக்க வட கொரியாவில் தொடர்ந்தும் உணவு தட்டுப்பாடு நிலவிவருகின்றது. இந்நிலையில் வளர்ச்சியை அதிகரிப்பதும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் முக்கியப் …

மேலும் வாசிக்க

நான்காவது டோஸ் தடுப்பூசியை அங்கீகரித்தது இஸ்ரேல்!

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய் பரவல் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. சூழலுக்கு ஏற்றவாறு நான்காவது பூஸ்டர் டோஸை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு ஃபைஸர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கிய முதல் …

மேலும் வாசிக்க

ஒமிக்ரோன் இதுவரையில் 57 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்!

ஒமிக்ரோன் வேகமாகப் பரவி வருவதாகவும், தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், டெல்டா வைரசின் பாதிப்பை விடவும் குறைவான பாதிப்பே ஒமிக்ரோனால் ஏற்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம் வெளியானது!

புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம், இத்தாலிய விஞ்ஞானிகளினால் வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரான் வைரஸின் புகைப்படத்தை, முதன் முறையாக ரோமிலுள்ள Bambino Gesù குழந்தைகள் வைத்தியசாலையின் விஞ்ஞானிகளே வெளியிட்டுள்ளனர். வைரஸின் உருவத்தில் ஒட்டியிருக்கும் மனிதர்களின் செல்களுக்குள் நுழைய தேவைப்படும் புரதத்தில், டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரான் வைரஸில் அதிக பிறழ்வுகள் உள்ளதாக தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், இவை டெல்டா வகை …

மேலும் வாசிக்க

5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம்!

5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயற்திறன் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இருக்கும் என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்த வயதினருக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் கொவிட்-19 தடுப்பூசி இதுவாகும். ஐந்து முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு தலா 10 …

மேலும் வாசிக்க

ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே இடம்பெற்ற மிகவும் எதிர்பார்ப்புமிக்க பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஊடகவியலாளர்கள் இரு நாடுகளிலிருந்தும் சுதந்திரமாக நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதேவேளை இந்த ஒப்பந்தம் “ஒரு வருடத்திற்கும் மேலாக கடினமான பேச்சுவார்த்தைகளின்” விளைவு என …

மேலும் வாசிக்க