Latest News
Home / விளையாட்டு (page 22)

விளையாட்டு

முதல் இன்னிங்ஸில் ஆஸி 195 ஓட்டங்களுக்கு சுருண்டது: இந்தியா நிதான துடுப்பாட்டம்!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில் சுப்மான் கில் 28 ஓட்டங்களுடனும் செடீஸ்வர் புஜாரா 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டினை வீழ்த்தினார். மெல்பேர்ன் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) …

மேலும் வாசிக்க

பிக் பேஷ்: சிட்னி தண்டர் அணி 129 ஓட்டங்களால் அபார வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 14ஆவது லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணி 129 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. கன்பெர்ரா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி தண்டர் அணியும் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு …

மேலும் வாசிக்க

பிக் பேஷ்: அடிலெய்ட் அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி 2 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியும் பிரிஸ்பேன் ஹீட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் …

மேலும் வாசிக்க

அதிக தொகைக்கு ஏலம் போனது பிரட்மனின் பச்சை நிற டெஸ்ட் தொப்பி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரமான டொனால்டு பிராட்மேன் அவரது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிந்த தொப்பி ரூ.2.50 கோடிக்கு ஏலம் போனது. உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான 2 ஆவது நினைவுச் சின்னம் என்ற பெயரை பிராட்மேனின் தொப்பி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னா் ஷேன் வாட்சனின் டெஸ்ட் கிரிக்கெட் தொப்பியே உலகிலேயே அதிக விலைக்கு (ரூ.5.61 கோடி) விற்பனையான சாதனையை படைத்துள்ளது. தற்போது பிராட்மேனின் தொப்பியை ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தொழிலதிபரான …

மேலும் வாசிக்க

பிக் பேஷ்: சிட்னி சிக்ஸர்ஸ் அணி சிறப்பான வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின், 11ஆவது லீக் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ஹோபர்ட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியும் மோதின. எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் …

மேலும் வாசிக்க

முதன்மையான கால்பந்து லீக் தொடர்கள்: வார இறுதியில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்!

வார இறுதியில் நடைபெற்ற ஒவ்வொரு நாடுகளுக்குமான தனித்துவமான, முதன்மையான கால்பந்து லீக் தொடர்களில் நடைபெற்ற முக்கியப் போட்டிகளின் முடிவுகளை சுருக்கமாக பார்க்கலாம். முதலாவதாக ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில், நடைபெற்ற ரியல் மட்ரிட் மற்றும் ஈபர் அணிகள் மோதிய போட்டியின் முடிவினை பார்க்கலாம். முனிசிபல் டி இபுருவா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் களத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்த இப்போட்டியில், ரியல் …

மேலும் வாசிக்க

நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: பாக். அணியில் பாபர் அசாம்- இமாம் உல் ஹக் விலகல்!

நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இமாம் உல் ஹக் ஆகியோர் விலகியுள்ளனர். பாபர் இல்லாத நிலையில் முகமது ரிஸ்வான் அணியின் தலைவர் பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் பாகிஸ்தானின் 33ஆவது அணித்தலைவரானார். பாபர் அசாமுக்கு வலது கட்டைவிரல் காயம் …

மேலும் வாசிக்க

36 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்தியா!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தனது மிகக் குறைந்த டெஸ்ட் ஓட்டங்களை பதிவு செய்து உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. …

மேலும் வாசிக்க

தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக 22 பேர் கொண்ட குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். குறித்த அணியின் தலைமைத்துவம் திமுத் கருணாரத்னவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்துஷ் குணதிலக, அசித பெர்ணான்டோ மற்றும் தில்ஷான் மதுசங்க ஆகிய மூன்று புதிய வீரர்களுக்கு இந்த தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் வாசிக்க

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் ஜோன்சன் சார்லஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அவிஸ்க பெர்ணான்டோ 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். …

மேலும் வாசிக்க