Latest News
Home / உலகம் (page 7)

உலகம்

சீன ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்திப்பு: முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெய்நிகர் உச்சிமாநாடு திங்கட்கிழமை நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செப்டம்பர் 9ஆம் திகதி தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையேயான போட்டியை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கான வழிகள் மற்றும் எங்கள் நலன்கள் இணையும் இடங்களில் ஒன்றாகச் செயல்படுவதற்கான வழிகளைப் …

மேலும் வாசிக்க

வடகொரியாவில் உணவு பஞ்சம்: நாட்டு மக்களுக்கு கிம் முக்கிய அறிவிப்பு!

வடகொரியாவில் உணவு பஞ்சம் உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ள நிலையில், அறுவடை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என …

மேலும் வாசிக்க

சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாக்கும் முழு வலிமை எங்களிடம் உள்ளது: அமெரிக்கா!

சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாப்பதற்கான முழு வலிமை தங்களுக்கு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மார்க் மில்லே இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இன்னும் 24 மாதங்கள் வரை தாய்வான் மீது சீனா ராணுவ …

மேலும் வாசிக்க

2025ஆம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிடுங்கள்: நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் வேண்டுகோள்!

உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ‘விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாக உள்ளது’ என கிம் கூறினார். பொருளாதாரத் தடைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை …

மேலும் வாசிக்க

சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து – தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது. எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன அரசு சேமிக்க, இடைமறிக்க, திசை திருப்ப உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

மேலும் வாசிக்க

தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை!

சீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சி.என்.என். நடத்திய டவுன் ஹால் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி பைடனிடம், சீனா தனது சொந்தம் என்று கூறிக்கொள்ளும் தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா முன்வருமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோ பைடன், ‘ஆமாம், அதைச் செய்ய எங்களுக்கு ஒரு கட்டாயம் …

மேலும் வாசிக்க

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது. இதன்போது, அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஏனையவர் உயிரிழந்தார். இந்த …

மேலும் வாசிக்க

தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் இருந்து ட்ரம்ப் வெளியேற்றப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு, ‘உண்மை சமூகம்’ (ட்ரூத் சோஷியல்) என்ற பெயரில் தனக்கென பிரத்யேக சமூக வலைதளத்தை நேற்று (புதன்கிழமை) தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தைத் தொடங்கியுள்ளேன். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அடாவடித்தனத்துக்கு சவால்விடும் வகையில் இதனைத் தொடங்கியுள்ளேன். சமூக வலைதளங்களில் …

மேலும் வாசிக்க

ஆப்கானில் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் உள்ளன!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் …

மேலும் வாசிக்க

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி!

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆப்பிரிக்க குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது. மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987-இல் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, கடந்த 2019 இல் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியில் கிடைத்த …

மேலும் வாசிக்க