Latest News
Home / ஆலையடிவேம்பு (page 80)

ஆலையடிவேம்பு

பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு 15 ஆயிரம் மாத்திரை உறைகள்அன்பளிப்பு . அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பு

வி.சுகிர்தகுமார்   அரச வைத்தியசாலைகளின் சிறந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும்  நோக்குடன் அங்குள்ள சிறிய தேவைப்பாடுகளை நிறைவேற்றி வினைத்திறனான சேவையினை அதிகரிக்கும் பணியில் தனியார் சமூக அமைப்புக்களும் கைகோர்த்து செயற்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினரும் அரச வைத்தியசாலைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் சேவையினை வளப்படுத்தும் முகமாக அங்கு தேவைப்பாடாக இருந்த மாத்திரைகள் உறைகளை இன்று வழங்கி வைத்தனர். …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு படைப்பான ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடல் முதல் பார்வை…

நம் நாட்டவர்களின் படைப்பாக ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடலின் முதல் பார்வை சமுகத்தளங்களில் வெளியிடப்பட்டு பாடலிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. ”தாயகமே விழித்திடு” என உபதலைப்பிடப்பட்ட இந்த பாடல் எமது ஆலையடிவேம்பினை சேர்ந்த கலைஞர்களால் முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட படைப்பு என்பது சிறப்புக்குரியது. பாடலுக்கான இசையினை S.கிருஷ், பாடலுக்கான வரிகளை V.T.செல்வி, பாடலை பாடியவர்கள் – A.கிஷோர், M.ஜினோச், V.T.செல்வி, M.ரம்மியா S.ஜதுர்சா மேலும் Mastering and Mixing …

மேலும் வாசிக்க

கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை!!

வி.சுகிர்தகுமார்   கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 12 நாட்களின் பின்னர் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் ஏற்படுத்தப்பட்ட சந்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த நாட்களில் அக்கரைப்பற்று சாகாம …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்டது! சந்தை தர்சங்கரி மைதானத்திற்கு இடமாற்றம்.

வி.சுகிர்தகுமார்  ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது. ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையங்கள் யாவும் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறான சுமூக நிலை இன்று உருவானதை அவதானிக்க முடிந்தது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவை பிரிவில் நீரின்றி கருகும் வேளாண்மை – விவசாயிகள் கவலை!!

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவைத் திணைக்களத்திற்குட்பட்ட நீத்தையாறு தென்கண்டத்தில் மேற்கொள்ளபட்ட 650 ஏக்கர் நெற்காணி மற்றும் தோணிக்கல்மேல், நீத்தையாறு மேல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிகளவான வேளாண்மை செய்கையும் நீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைப்புக்களும் விவசாயிகளும் கவலை தெரிவித்தனர். அரசாங்கம் பல்வேறு உதவிகளையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்ற நிலையில்  இவருட சிறுபோகச் செய்கையின் பொருட்டு அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளராலும் அனுமதியளிக்கப்பட்ட இக்காணிகளுக்கே …

மேலும் வாசிக்க

திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இவரின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி நிறுவுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இவர் வரும் காலத்தில் எமது ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பிரதேச மாணவர்களுக்காக தொழில் நுட்ப கல்லூரியை நிறுவுவதற்கான விருப்பத்தினை தெரிவித்துள்ளார். இவர் கடந்த 10 வருடமாக யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, மொனராகலை, மன்னார் போன்ற மாவட்டங்களில் வசிக்கின்ற வறுமைக்குட்பட்ட கல்வியில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றார். மேலும் அம்பாரை மாவட்டத்திலும் இவ்வாறான 60 மாணவர்களுக்கும் மேல் மாதாந்தம் 2000ரூபா …

மேலும் வாசிக்க

திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இன்று மாவட்ட ரீதியாக வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார்.

திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக தனது தொழிலை இழந்த மிகவும் வறிய மேலும் 14 குடும்பங்களுக்கும் அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் வட மாகாணத்தில் பல இடங்களிலும் 2500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று அவருடைய தொண்டர்களுக்கூடாக வழங்கி வைத்தார்.  

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பின் நிவாரணப்பணி இன்றும்…

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக  அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பு  மேற்கொண்ட நிவாரணப்பணி அக்கரைப்பற்று 8/3 மற்றும் 8/2  பிரிவுகளில் இன்று இடம்பெற்றது. அன்புக்கரங்கள் அமைப்பின் நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப்பணியில் கிராம உத்தியோகத்தர்களான க.லோகநாதன் மற்றும் என்.மதுஜா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிவாரணப்பொதியினை வழங்கி வைத்தனர். கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமான காலம் முதல் இன்றுவரை பல்வேறு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் – முறைப்பாட்டை நேரடியாக பிரதேச செயலகத்தில் எழுத்து மூலம் முன்வைக்கவும் முடியும்.

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட 7899 குடும்பங்களுக்கு பல்வேறு சமூக நலத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவாக 3கோடியே 94 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் இது தொடர்பான விபரங்களை பிரதேச செயலகத்தில் பார்வையிட முடியும் எனவும் குறிப்பிட்டார். இதனடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் 4712 பேருக்கும்  காத்திருப்போர் பட்டியலில் உள்ள 1448 பேருக்கும் தொழில் பாதிக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் நிவாரணப்பணி

வி.சுகிர்தகுமார்   கொரோனா அச்சம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் அம்பாரை மாவட்டத்தில் கைகோர்த்து செயற்படுகின்றன. இதற்கமைவாக  மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஊடாக பெறப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பிரிவுகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் …

மேலும் வாசிக்க