Latest News
Home / இலங்கை / O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி : பிரமிக்கும் பாடசாலை ஆசிரியர்கள்!!

O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி : பிரமிக்கும் பாடசாலை ஆசிரியர்கள்!!

இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார்.

பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சிறுமியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் திம்புலாகல அரலங்வில, விலயாய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

தான் 6ஆம் வகுப்பு கற்ற போதிலும், தன்னால் சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற கூடிய திறன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களம், ஆங்கிலம் மற்றும் கணிதம் மட்டுமல்லாமல் விலங்கியல் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற லேஹன்ஸா ஆவர்த்தன அட்டவணையை சில நொடிகளில் படித்து பாடசாலை அதிபர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

செனுலி தனது முதல் ஆண்டில் இருந்தபோதும் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார் என்று அவரது பெற்றோர் கூறுகிறார்கள்.

சிங்கள மொழில் கற்கும் அவர் ஆங்கிலத்தில் இருந்தளவு திறமையை காட்டியது ஆச்சரியமாக இருந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணித பாடத்தில் விசேட திறமையை காட்டும் அவர் நம்பமுடியாத அளவிற்கு பில்லியன்களையும் டிரில்லியன்களையும் கணக்கிடுவார் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

“எனக்கு 6ஆம் வகுப்பிலேயே சாதாரண தர பரீட்சை எழுத வேண்டும். அனைத்து பாடத்தில் ஏ சித்தி பெற முடியும். எனக்கு கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் உட்பட பல விடயங்களை செய்ய முடியும். எனக்கு உதவி செய்த ஒருவர் இருந்தால் என்னால் இலங்கைக்காக பல்வேறு வெற்றிகளை பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *