Latest News
Home / விளையாட்டு (page 5)

விளையாட்டு

நான்காவது போட்டியிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 46 …

மேலும் வாசிக்க

இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி

இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அதாவது 1982 ஆம் ஆண்டு இன்று போல் ஒரு நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு பீ சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர் மறைந்த பந்துல வர்ணபுரவாகும். இலங்கை கலந்துக்கொண்ட …

மேலும் வாசிக்க

70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதன்படி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனவை 70 இலட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இதேவேளை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

28 கோடி ரூபாவை அள்ளிய வனிந்து!

இந்திய பிரிமியர் லீக் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பாரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார். அதன்படி, 1,075 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்) அவர் ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ரூபாவில் இது 2,877 இலட்சம் ஆகும். பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி இவ்வாறு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் ஏலம் தற்போது பெங்களூரில் இடம்பெற்று வருகிறது. …

மேலும் வாசிக்க

ஆஸி பந்து வீச்சாளர்கள் அபாரம்: முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி தோல்வி!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில்,1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 …

மேலும் வாசிக்க

பெரும் எதிர்பார்ப்பு- எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றன. இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இறுக்கமான கொவிட்-19 கட்டுப்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், …

மேலும் வாசிக்க

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை!

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது. ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால …

மேலும் வாசிக்க

மாலிங்கவிற்கு புதிய பதவி!

அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியின் பந்துவீச்சு மூலோபாய பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.

மேலும் வாசிக்க

இலங்கை ரி20 அணியில் மாற்றம்!

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ரி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கை அணி சிட்னி மைதானம், மனுகா ஓவல் மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் ஐந்து சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கு 20 பேர் கொண்ட அணி பெயரிடப்பட்டுள்ளது. பிரதித் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளமை விசேட …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் மாதம் ஆரம்பம்…

2022 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான போட்டியில் பங்குபற்றும் பத்து அணிகளின் கூட்டம் ஒன்று நேற்று (22) இடம்பெற்றதுடன் போட்டிகளை மார்ச் மாத இறுதியில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவில் போட்டியை நடத்துவதாக இருந்தால் மும்பைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இரண்டாவது விருப்பம் ஹகமதாபாத் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. மார்ச் மாதத்துக்குள் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், …

மேலும் வாசிக்க