Latest News
Home / விளையாட்டு (page 41)

விளையாட்டு

விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3 வது நாள் ஆட்டத்தில் ஜடேஜா முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். 2 வது விக்கெட்டாக டீன் எல்கரை வீழ்த்தியபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 வது விக்கெட்டை பதிவு செய்தார். ஜடேஜாவுக்கு இது 44 வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்து வீச்சாளர் …

மேலும் வாசிக்க

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது. அத்துடன், குறித்த போட்டி நேற்றைய தினம் நடத்தப்படவிருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு …

மேலும் வாசிக்க

சதம் விளாசி சாதனை படைத்த சாமரி அத்தபத்து!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து சதம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந் நிலையில் இன்றைய தினம் சிட்னியில் ஆரம்பமான இத் தொடரின் முதலாவது …

மேலும் வாசிக்க

இராணுவத்தில் சந்திமலுக்கு புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் உத்தியோத்தராக நாளை முதல் இணையவுள்ளதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியலை பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளரும் தலைமை தேர்வாளருமான மிஸ்பா உல் ஹக் வெளியிட்டுள்ளார்., இந்த அணியில் இருந்து முன்னணி சகலதுறை வீரர்களான ஷோயிப் மாலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் சர்பராஸ் அஹமட் தலைமையிலான அணியில் பாபர் அசாம், ஆபிட் அலி, அகமது சேஷாத், ஆசிப் அலி, ஃபஹீம் அஷ்ரப், …

மேலும் வாசிக்க

ஒரே நாளில் இரட்டை வெற்றி ; இறுதிப் போட்டியில் ஒசாகா

பான்பசிபிக் பகிரங்க டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் உலகின் 4 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா ஒரே நாளிலேயே இரட்டை வெற்றிபெற்றுள்ளார். காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனையான யுலியா புதின்ட்செவாவை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்சை …

மேலும் வாசிக்க

3 வகை கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 72 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது. 72 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் (22), அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2 வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். அதுமட்டுமல்ல …

மேலும் வாசிக்க

அகிலவுக்கு மீண்டும் சோகம்!

முறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரை சர்வதேச போட்டிகளில் பந்து வீச முடியாது எனவும் ஐ.சி.சி. சுட்டிக்காட்டியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் 18 ஆம் திகதி காலி மைதானத்தில் நிறைவுக்குவந்த …

மேலும் வாசிக்க

உலகில் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை ரிஷப் பந்த் வெளிக்காட்ட வேண்டும்: ரவிசாஸ்திரி

இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப்பந்த், உலகரங்கில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை வெளிக்காட்டும் நேரம் தற்போது வந்துள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். மூத்த வீரர் டோனியின் ஓய்வு மற்றும் எதிர்வரும் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, விக்கெட் காப்பாளர் இடத்திற்கு இளம் வீரர் ரிஷப் பந்த்தை கொண்டு வருவதற்கு இந்திய அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்காக அவருக்கு …

மேலும் வாசிக்க

இலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்?

இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதம அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாத …

மேலும் வாசிக்க