Latest News
Home / விளையாட்டு (page 3)

விளையாட்டு

சாமிக்கவுக்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடை!

இலங்கை அணியின் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை விதித்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை கருணாரத்ன ஒப்புக்கொண்ட நிலையில் போட்டித் தடைக்கு …

மேலும் வாசிக்க

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை!

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது. முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி நிராகரிக்கப்பட்ட, இரண்டாவது பிணை விண்ணப்பம் கடந்த 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாவது பிணைக்கோரிக்கை மனுவினை எதிர்வரும் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நிவ் சவுத்வேல்ஸ் நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்த போதும், தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் விடுத்த …

மேலும் வாசிக்க

இலங்கை மகளிர் கிரிக்கெட்: ஹஷான் திலகரத்ன இராஜினாமா

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஹஷான் திலகரத்ன இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 1ஆம் திகதி முதல் ஹஷான் திலகரத்ன, பொறுப்பேற்கவுள்ளார்.

மேலும் வாசிக்க

ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: நெதர்லாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் குழு ஏ- 9ஆவது லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ணத் தொடரின் பிரதான சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஜீலொங் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 …

மேலும் வாசிக்க

உலக கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறினார் துஷ்மந்த சமீர!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் துஷ்மந்த சமீர, 2022 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசிய துஷ்மந்த சமீர போட்டியின் இடைநடுவே உபாதைக்கு உள்ளானார். இதேவேளை பிரமோத் மதுசான் மற்றும் …

மேலும் வாசிக்க

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி வென்றது. ஹைதராபாத் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் …

மேலும் வாசிக்க

இலங்கை அணி 141 ஓட்டங்கள் முன்னிலையில்…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 506 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டம் இழக்காமல் 145 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 124 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஷஹிப் அல் ஹசன் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹுசைன் 148 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பெற்றனர். முதல் …

மேலும் வாசிக்க

டெல்லி கப்பிட்டல்ஸ் அணி தோல்வி : மும்பை அணியின் வெற்றியால் பிளே ஒப்க்குள் நுழைந்தது பெங்களூர் !

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. இதனை அடுத்து 160 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய …

மேலும் வாசிக்க

மஹேல ஜயவர்தனவின் காரசாரமான பதிவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, பிரதி சபாநாயகர் பதவி குறித்து தனது கவலையை தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுத்து பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் இருமுறை பதவி விலகியமை நாட்டின் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதாக அவர் கூறுகிறார். இப்படி இருந்தால், பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருக்க வேண்டும் என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார். இலங்கை குழாமில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மார்ச் 8 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளனர். பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு… திமுத் கருணாரத்ன – தலைவர் கமில் மிஸாரா ஓஷத …

மேலும் வாசிக்க