Latest News
Home / விளையாட்டு (page 10)

விளையாட்டு

உலக கிண்ண போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு, தசுன் ஷானக்க (தலைவர்) தனஞ்சய டி சில்வா (உப தலைவர்) குசல் பெரேரா தினேஸ் சந்திமல் அவிஷ்க பெர்னாண்டோ பானுக ராஜபக்ஷ சரித் அசலங்க வனிந்து ஹசரங்க கமிந்து மெண்டிஸ் சாமிக கருணாரத்ன மஹீஷ் தீக்ஷன பிரவீன் ஜயவிக்ரம நுவன் பிரதீப் துஷ்மந்த சமீர லஹிரு …

மேலும் வாசிக்க

சந்திமாலின் போராட்டம் வீண்: தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை அணி!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் …

மேலும் வாசிக்க

3 ஆவது ஒருநாள் போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு!

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 204 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். துஷ்மந்த …

மேலும் வாசிக்க

ஒரு நாள் போட்டிகளில் இருந்து தென்னாபிரிக்கா அணி தலைவர் நீக்கம்

தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டெம்பா புவாமா அடுத்து இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் அணித் தலைவராக கேசவ் மஹராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

தென்னாபிரிக்கா தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு: சந்திமாலுக்கு வாய்ப்பு!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களுக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமால் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சந்திமால் இலங்கை அணிக்காக விளையாடவில்லை. இதேபோல, கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பிறகு தனிமைப்படுத்தப்பட்ட குசல் பெரேராவும் அணியில் இணைந்துள்ளார். லஹிரு மதுஷங்க, …

மேலும் வாசிக்க

பாராலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை வீரர் !!

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார். அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளதுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

மேலும் வாசிக்க

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்…

ஜப்பானின் டோக்கியோ நகரில் 16 ஆவது பாராலிம்பிக் போட்டி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது. வரும் செப்டம்பா் 5 ஆம் திகதி வரை 13 நாள்களுக்கு நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாராலிம்பிக்கில், விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமையிலிருந்து தொடங்குகின்றன. டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சா்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐபிசி) தலைவா் ஆன்ட்ரூ பாா்சன்ஸ், ஜப்பான் அரசா் நருஹிடோ, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா உள்ளிட்ட …

மேலும் வாசிக்க

நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹசரங்க- சமீர ஒப்பந்தம்!

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ஐ.பி.எல். கிண்ணத்தை ஏந்தாத றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர்கள் இருவரும் விளையாட உள்ளதனை பெங்களூர் அணி நிர்வாகம் உறுதிசெய்துள்ளது. இதில் வனிந்து ஹசரங்க, அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் செம்பாவுக்கு மாற்றீடாக விளையாடவுள்ளார். சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க …

மேலும் வாசிக்க

ஒலிம்பிக்கில் போட்டிகளில் இனி கிரிக்கெட்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சோ்ப்பதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறது ஐசிசி. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சோ்ப்பதற்கு கடந்த சில காலமாகவே ஐசிசி முனைப்பு காட்டி வரும் நிலையில், தற்போது அதற்கு பிசிசிஐ-யின் ஆதரவும் கிடைத்துள்ளது. முன்னதாக, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சோ்த்தால் தனது சுயாட்சித்தன்மையை இழக்க நேரிடும் என்பதுடன், கிரிக்கெட்டில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலையீடும் இருக்கும் என்பதால் …

மேலும் வாசிக்க

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி – முதலாவது இடத்தில் அமெரிக்கா

நூற்றுக்கணக்கான போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் களமிறங்கிய அமெரிக்கா 2020 ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது கோடைக்கால விளையாட்டுக்கான தங்கப் பதக்க அட்டவணையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவை பின்னுக்குத் தள்ளி 39 தங்கப் பதக்கத்துடன் சீனாவை பின்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு அமைய முதல் இடத்திலுள்ள அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கல பதக்கங்களுமாக மொத்தம் …

மேலும் வாசிக்க