Latest News
Home / கவிதைக்களம்

கவிதைக்களம்

என் தாயே…

சுமையாய் வந்த என்னை சுகமாய் ஏற்ற தாயே! உன்னை உருக்கி என்னை வடித்த சிற்பி நீயே! ஆயிரம் முத்தங்கள் இட்டு, என்னை அரங்கேற்றம் செய்தாய்! எனக்காக மட்டும் வாழும் என் அன்பு தாயே, இனி எத்தனை பிறவி எடுத்தாலும் என் அன்னை நீயே!

மேலும் வாசிக்க

என் அம்மா….

நெஞ்சகத்தின் கீழ் கூடுகட்டியவள்! தொப்பிலிலே கையிறு கட்டியவள்! உதிரத்தில் உணவு ஊட்டியவள்! எனை காத்த இரும்பு பெட்டியவள்! பத்து மாதம் எனை சுமந்தவள்! வலியோடு பகலிரவு பல கடந்தவள்! இதய துடிப்பை இன்னிசையாக்கியவள்! இருள் பயத்தை போக்கியவள்! உளி கொண்டு வலி ஊசியாய் குத்தியும்! எனை பெற்றெடுத்(த)…..தாயே! மூன்றெழுத்து அம்மா! நீ எனக்கு முடிவில்லா வானம்!

மேலும் வாசிக்க

கனவில் என் தேவதை வந்தாள்!

காற்றே உன்னோடு நான் கவிதை பாடுவேன் கனவில் நேற்று என் தேவதை வந்தாள் ஆற்றின் அலையே உன்னோடு நான் நீராடுவேன் காதோரம் அவள் மெல்லிய வார்த்தை சொல்லி போனாள் வான் நிலவே உன்னை வந்து முத்தமிட வேண்டும் சத்தமில்லாமல் இன்று அதை அவள் தந்து போனாள் மலர்த்தோட்டத்து ரோஜாக்களே இதழ்களை விரைந்து தூவுங்கள் இதோ சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள் !

மேலும் வாசிக்க

பிரிவினை! கவிதை…

காதலின் அணுக்கருக்கள் நம்முள் பரவத் தொடங்கின.. எத்தனை பரவசமான நிகழ்வது! நீர்த்துளிகளை பனிக்கட்டி ஆக்கியது போல் ஒரு நெருக்கம் கைக்குட்டைகளில் அன்பை துடைத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு ஈரம் இருவருமிடமுமிருந்தது உதடுகளை தொட்டுக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமும் அப்போது இல்லாமல் இல்லை ஆனால் மாறும் காலநிலைகள் நம் காதலின் சூழலை மாற்றாமலில்லை ஒரு அனல் பனிக்கட்டியை விழுங்கியதைப் போல இருவருமிடையே இடைவேளி வழிந்தது மொழிகள் முட்டும், கோபம் மண்டையேறும் அழகின வார்த்தைகள் …

மேலும் வாசிக்க

கொரோனாவாகிய நான்

தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி கொடுக்க வந்தவன் நான் . . . வல்லரசிற்கும் பேரரசிற்கும் இயற்கை இதுவென பாடம் புகட்ட வந்தவன் நான் . . . சாதிகளாய், மதங்களாய், மொழிகளாய், இனங்களாய் சண்டையிட்டு சாகும் மூடர்களின் கூட்டத்தை வேறருக்க வந்தவன் நான் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை கொன்றவர்களின் இறுதி நாட்களை …

மேலும் வாசிக்க

தைரியம்

உன்னை விட்டால் எனக்கேது வேறு வழி. உன்னை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீயே உத்தமம். நீயே உத்வேகம். பயம் என்னை நித்தம் சாகடித்தது. கலவரபட்ட என் மனதில் நீ என்னுள் தீயாய் இறங்கினாய். கலக்கம் நீங்கியது. இருள் விளகியது. பதற்றம் பறத்து போனது. தெளிவு வந்தது. வெளிச்சம் பிறந்தது. யானை பலம் வந்தது. தெளிந்த நீரோடை இனி என் வாழ்க்கை. இனி என்னை அசைக்க யாராலும் முடியாது. …

மேலும் வாசிக்க

வலி இதயமே!!

அன்று உன் இதயத்தில் உயிரோட்டமாக இருந்த எந்தன் நினைவு யாவும் இன்று உன் இதயத்தில் வெறுமையாக சுவடுகளின்றி அழிந்தனவோ வலிக்கிறது எந்தன் இதயமே கண்கள் ஈரமாகி நனைகிறது உயிரற்ற ஜீவனாய் நடை பயிலும் எந்தன் உடலுக்கு உயிர் தருவாயோ உன் வார்த்தைகளால் விடை வேண்டி காத்திருக்கிறேன்

மேலும் வாசிக்க

தீபாவளி

பண்டிகை எல்லாம் பகட்டாக போக ஸ்வரம் இல்லாத சங்கீதமாக ஸ்ருதி இல்லாத குரலாக பண்பாட்டை சிதைத்து போலி கலாச்சாரத்தை அலங்கரித்து உதட்ளவு சிரிப்பில் ஏகபோக கொண்டாட்டம். தற்போதய தலைமுறை நுகர்வு கலாச்சாரத்தின் உச்சம் பாரம்பரிய பழக்க வழக்கம் மறந்த பரிதாபம் காசு கொடுத்து கடையில் பட்சணங்கள், இனிப்பு வகைகள் வாங்கி பாஸ்ட்புட் பாணியில் பண்டிகை கொண்டாடும் கோமாளிகள். பணக்கார வீட்டு பிள்ளை ஆயிரம் வாலா வெடிக்குது ஏழை வீட்டு பையன் …

மேலும் வாசிக்க

நண்பனின் வருகை

  நீ வந்ததால் இரண்டு நாட்களில் ஈராயிரம் இதயங்கள் நின்றன இரண்டு வாரம் என்றால் இரண்டு லட்சம் இதயங்கள் ஸ்தம்பித்திருக்கும் இன்று நீ செல்வதால் சாலைகளில் வாகன நெரிசல் விமான நிலையத்தில் மாதரின் பிரவேசம் விமானமோ இயங்க மறுக்கிறது விடை கொடுக்க மனமோ தடுக்கிறது எங்கள் இதயங்களையும் கவர்ந்தவனே சென்று வா நண்பனே வென்று வா மேலும் பல இதயங்களை

மேலும் வாசிக்க

மீண்டும் வந்த நிலா

  என் அன்பு தோழமைகளே…..! பிறை நிலவாய் தளம் வந்து பௌர்ணமியா நிறைவாகி தேய்பிறையாய் போனவள் நான்…. மீண்டும் “வளர்பிறை”-யாய் என் “இரண்டாம் அத்தியாயம்” வாழ்க்கை என்னும் “சதுரங்கம்” விளையாடி…. “நேசக்” கரம் தேடியே இந்த தளமென்னும் “அன்னைமடி”- யில் மீண்டும் அடிவைத்தவளாய் உங்கள் “நிலாமகள்”…………

மேலும் வாசிக்க