Latest News
Home / கல்வி (page 2)

கல்வி

GRADE 10 MATHS UNIT 2. வர்க்கமூலம்

இப்பாடத்தை நாம் கற்பதன் ஊடாக நாம், ஓர் எண்ணின் வர்க்கமூலத்தை பல்வேறு முறைகளில் காண்பதற்கு பயிற்சி பெறுவோம்.                                            நிறைவர்க்க எண் யாதாயினும் ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கும் போது பெறப்படும் எண் நிறை வர்க்க எண்ணாகும். யாதாயினும் ஒரு எண் செய்முறை நிறை வர்க்க எண் 4 4 X 4 16 7 7 X 7 49 3 3 X 3 9 12 …

மேலும் வாசிக்க

GRADE 10 MATHS UNIT 1. சுற்றளவு

1. சுற்றளவு தளவுரு ஒன்றின் சுற்றிவர உள்ள நீளம் சுற்றளவு எனப்படும். இனி நாம் ஒவ்வொரு தளவுருக்களின் சுற்றளவுகளை எவ்வாறு கணிப்பது என்றுபார்ப்போம். முதலில் செவ்வகம் ஒன்றின் சுற்றளவை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம். செவ்வகத்தின் எதிர்பக்கத்தில் உள்ள நீளங்கள் , அகலங்கள் சமன் என்பதைஞாபகப்படுத்தவும் , இந்தச் செவ்வகத்தின் நீளம் = 7 , அகலம் =3 அத்துடன் இதைச்சுற்றி அளந்தால் (7+3+7+3 = 20) ஆகவே இச் செவ்வகத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும். செவ்வகத்தின் சுற்றளவு = 2 மடங்கு நீளம் + 2 மடங்கு அகலம்    ஆகவே செவ்வகத்தின் சுற்றளவை காண்பதற்கான சமன்பாடு . சதுரம் ஒன்றின் சுற்றளவைக் காணல் சதுரம் ஒன்றின் நான்கு பக்க நீளங்களும் சமன் என்பதை ஞாபகப்படுத்துங்கள். இந்தச் சதுரத்தின் நீளம் = 5 , அகலம் =5 அத்துடன் இதைச் சுற்றி அளந்தால்(5+5+5+5 = 20) ஆகவே இச் சதுரத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும். ஆகவே சதுரத்தின் சுற்றளவை காண்பதற்கான சமன்பாடு . அடுத்ததாக நாம் முக்கோணியின் சுற்றளவை எவ்வாறுகாண்பது எனப் பார்ப்போம்.   முக்கோணியின் சுற்றளவானது , முக்கோணியின் மூன்று பக்கத்தையும்கூட்டுவதன் மூலம் பெறப்படும். உ + ம்: உருவில் உள்ள முக்கோணியின் சுற்றளவு = 9 + 11 + 10 = 30 cm   அடுத்ததாக நாம் வட்டத்தின் சுற்றளவை எவ்வாறுகாண்பது எனப் பார்ப்போம். வட்டத்தின் சுற்றளவு பரிதி எனப்படும் , உதாரணத்திற்கு கீழே உள்ள வட்டத்தைகருதுக. ஆரைச் சிறை ஒன்றின் சுற்றளவை அளத்தல். தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 01  தமிழ் மொழி …

மேலும் வாசிக்க

மாணவர் அதிக புள்ளிகள்!!! பெறுவதில் ஆசிரியர் வகிபாகம்… நீங்களும் ஆசிரியர்

  மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக காணப்படுவது ஆசிரியர்களின் கற்பித்தல் முறையாகும். ஆசிரியர் மாணவர்களின் இயல்புத் தன்மை, சுபாவம், தேவை, முயற்சி என்பவற்றுக்கேற்ப தனது கற்பித்தல் முறைகளை வடிமைத்துக் கொள்ள வேண்டும். வினைத் திறனான கற்பித்தல் முறையினூடாக சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம். தனது செயலை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக கற்பித்தலின் போது பல்வேறு முறைகளை ஆசிரியர்கள் பின்பற்றி வருகின்றனர்.வெற்றிகரமான கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர் பல்வேறு …

மேலும் வாசிக்க

இலங்கையின் வட மாகாணம் பற்றிய முக்கிய பொது அறிவுத் தகவல்கள்!

  மாகாண ஆளுனர் – சுரேன் ராகவன். சிறிய மாவட்டம் – #யாழ்ப்பாணம். பெரிய மாவட்டம் – #முல்லைத்தீவு. கடல்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா. குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு. பெரிய தீவு – #நெடுந்தீவு. சிலிக்கன் மணல் காணப்படும் இடம் – #நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம். மாகாணசபை கட்டடத்தொகுதி அமைந்துள்ள இடம் – #கைதடி. சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் – யாழ்ப்பாணம். சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் – முல்லைத்தீவு. …

மேலும் வாசிக்க

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (The Open University of Sri Lanka) அனைவரும் அறிய வேண்டியமுக்கியமான அம்சங்கள்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகம் கிடைக்காததனால் மாணவர்கள் மொத்தமாகவே கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். பல்கலைக்கழகம் மட்டுமே உயர் கல்விக்கான நிறுவனம் அல்ல. அதையும் தாண்டி உயர் கல்விக்கான வாய்ப்புகள் அனேகம் உள்ளன. க.பொ.த. உயர் தரத்தில் தோற்றி சித்தியடையும் மாணவர்களில் சுமார் நான்கு வீதமானோரே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். 96 வீதமானோர் பல்கலைக்கழக வாசல்கள் வரை சென்று திரும்பு கின்றனர். இத்தகைய மாணவர்கள் தமது …

மேலும் வாசிக்க