Latest News
Home / உலகம் (page 51)

உலகம்

வங்கி தவறுதலாக வைப்பிலிட்ட பணத்தை செலவிட்ட தம்பதி மீது வழக்கு!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்கள் பணத்தை வைப்பிலிட்ட நிலையில், அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்துள்ளனர். ரொபர்ட் மற்றும் டிஃபானி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டொலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக வைப்பு செய்திருந்தது. அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு …

மேலும் வாசிக்க

ஜேர்மனியை உலுக்கிய சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்கள்- இருவரிற்கு 20 வருட தண்டனை

ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை  பாலியல் வன்முறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய இருவரிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 1998 முதல் 2008 வரையான காலப்பகுதியில் 450ற்கும் அதிகமானவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குபடுத்தியதாகவும் 32 பேரை பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அன்ரியாஸ் -மரியோ என்ற பெயர்களால் அழைக்கப்படும் இருவரிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. ஜேர்மனியின் வடபகுதியில் உள்ள ஹமெலின் என்ற பகுதியில் விடுமுறை முகாமிற்கு சென்ற சிறுவர்களை   இவர்கள் …

மேலும் வாசிக்க

ஃபேஸ்புக் பயனாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் இணையத்தில் வெளியீடு

உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் பயனாளர்களில் 41 கோடி பேரின் தொலைபேசி இலக்கத்தை இணையத்தளத்தில் ஃபேஸ்புக் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 13.3 கோடி பயனாளர்களின் தொலைபேசி இலக்கங்களும், ஒரு கோடியே 80 லட்சம் இங்கிலாந்து பயனாளர்களின் எண்களையும், வியட்நாமைச் சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் இணையத்தளத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபேஸ்புக் ஐடியுடன் (Facebook ID) அவர்களது தொலைபேசி இலக்கங்களும் வெளியாகியிருப்பதாகவும், இதன் மூலம் …

மேலும் வாசிக்க

பாகிஸ்தான் பொலிஸ்துறைக்கு முதல் முறையாக இந்து பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்!

பாகிஸ்தானை சேர்ந்த இந்துப் பெண்ணொருவர் முதன்முறையாக பொலிஸ் துணை உதவி ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த புஷ்பா கோலி என்ற பெண் சிந்து மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் சிந்து மாகாணத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த தகவலை மனித உரிமைகள் ஆர்வலரான கபில் தேவ் …

மேலும் வாசிக்க

தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது அவுஸ்திரேலியா?

இலங்கை தமிழ்   தம்பதியினரை அவர்களது குழந்தைகளுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என கோரி போரடி வரும் ஹோம் டு பைலோ அமைப்பு தனது டுவிட்டர் மற்றும் முகநூல்களில் இதனை தெரிவித்துள்ளது. நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்- ஆதரவாளர்கள் விமானநிலையம் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டும் என அந்த அமைப்பு …

மேலும் வாசிக்க

ஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி…?

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்­தாதி காய­ம­டைந்­துள்­ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்­துல்லா குர்தாஸ் என்­ப­வ­ரிடம் கைய­ளித்­துள்­ள­தாக சர்­வ­தேச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவர் முன்னாள் ஈராக் ஜனா­தி­பதி சதாம் ஹூசைனின் இரா­ணு­வத்தை சேர்ந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மறை­மு­க­மாக இருந்து ஐ.எஸ் அமைப்­பினை மீண்டும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள பக்­தாதி  அவ் அமைப்பை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பை அப்­துல்லா குர்­தா­ஸிடம் ஒப்­ப­டைத்­துள்ளார் என ஐ.எஸ் அமைப்பின் …

மேலும் வாசிக்க

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பம்!

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம்(சனிக்கிழமை) குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை, குறித்த மாநாட்டினை முன்னிட்டு பிரான்ஸின் சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …

மேலும் வாசிக்க

அமேசன் காட்டினை அச்சுறுத்தும் தீ – பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசன் மழைக்காடுகள். பிரேசில் மற்றும் கொலம்பியாவிற்கு இடைப்பட்ட பகுதியில் காணப்படும் இந்த காடுகள், உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. அமேசன் காட்டின் ஒரு பகுதியில் …

மேலும் வாசிக்க

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்

நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் எரிபொருள் விலைபற்றிய கடுமையாக விவாதம் நிகழ்து கொண்டிருந்த போது சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட் குழந்தைக்கு போத்தலில் பால் ஊட்டிய சம்பவம் அனைவர் மனதிலும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் தொழிலாளர் கட்சி உறுப்பினரான  டமாட்டி கோஃபி மற்றும் அவரது கணவர் டிம் ஸ்மித் ஆகியோர்  கடந்த ஜூலை மாதம் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த ஆண் குழந்தை ஸ்மித்- கோஃபி இவர்கள் தமது குழந்தையுடன் நேற்று பாராளுமன்ற அமர்வில் …

மேலும் வாசிக்க

ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்!

சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள சந்தைத் தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த இளம் பெண் கோரியுள்ளார். ஆனால் பெண்ணின் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிறீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி மறுப்பு தெரிவித்தார். …

மேலும் வாசிக்க