Latest News
Home / உலகம் (page 5)

உலகம்

யூடியூப்பில் திரைப்படம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு!

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன், ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இன்னும் திரைக்கு வராத நிலையில் அந்த திரைப்படம் யூடியூப்பில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யூடியூப் நிர்வாகத்திடம் பலமுறை அவர் புகார் தெரிவித்தும் அதை நீக்கும் நடவடிக்கை …

மேலும் வாசிக்க

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி – இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை! டென்மார்க் அரசாங்கம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க டென்மார்க் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேக்சின் பாஸ்பார்ட் நடைமுறை இனி இல்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் பொது முடக்கம், இரவு நேர ஊரடங்கு, பார், கேளிக்கை பூங்கா உள்ளிட்ட அனைத்தும் முன்கூட்டியே மூடுமாறு விதிக்கப்பட்ட உத்தரவு இரத்து …

மேலும் வாசிக்க

ஒமிக்ரோன் தொடர்பில் ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!

கொரோனா வைரசின் புதிய உருமாற்றமான ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, சீனாவின் உகானில் உருவான கொரோனா தொடங்கி பல்வேறு மாறுபாடுகள் வரையில், சுற்றுச்சூழல் தன்மையின் வேறுபாடுகளை இவர்கள் ஆராய்ந்து உள்ளனர். இதில் ஒமிக்ரோன் …

மேலும் வாசிக்க

சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்!

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் அமைப்பு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் பல நாடுகளில் இலட்சக்கணக்கான குழந்தைகள் அடிப்படை திறன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும், அதனால் மன இறுக்கம், போதிய ஊட்டச்சத்து குறைவின்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை குழந்தைகள் எதிர்கொள்வதாகவும் …

மேலும் வாசிக்க

2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி இதோ…

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள் இடம்பெறுகின்ற பொதுத் துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. இங்கு வழங்கப்பட்ட புள்ளிகளானது நிபுணர்களின் கருத்துக்களையும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக் கணிப்புக்களையும் பிரதிபலிக்கிறது. உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம் (WEF), தனியார் இடர் மற்றும் …

மேலும் வாசிக்க

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், 71 சதவீதமானவர்கள் மோடியை பிரபலமான தலைவராக அங்கீகரித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ ஜனாதிபதி 66 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 13 உலகத் தலைவர்களைக் கொண்ட குறித்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் …

மேலும் வாசிக்க

3.5 மில்லியனை கடந்த நாளாந்த கொவிட் தொற்று!

உலகளவில் நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் (21) பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 3,595,136 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்ப்டுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் அமெரிக்காவில் இருந்து 727,414 தொற்றாளர்களும், பிரான்சில் இருந்து 317,536 தொற்றாளர்களும் இந்தியாவில் இருந்து 317,536 தொற்றாளர்களும் மற்றும் பிரேசிலில் இருந்து 205,350 தொற்றாளர்களும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியம், , இத்தாலி, …

மேலும் வாசிக்க

கானாவில் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ட்ரக் விபத்து: 17பேர் உயிரிழப்பு- 500 கட்டடங்கள் சேதம்!

மேற்கு கானாவில் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மீது மோதி வெடித்ததில் குறைந்தது 17பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 59 பேர் காயமடைந்தனர். மேலும், 500 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் துணை இயக்குநர் ஜெனரல் செஜி சாஜி அமெடோனு தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) நாட்டின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள போகோசோ மற்றும் பாவ்டி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட்டில் …

மேலும் வாசிக்க

அவுஸ்திரேலியா செல்ல ஓர் அரிய சந்தர்ப்பம் ! மாணவர்கள் , தொழிலாளர்கள் நாட்டிற்குள் வர அனுமதி ! அறிவிப்பை வெளியிட்டார் அவுஸ்திரேலிய பிரதமர்

கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். தமது நாட்டிற்குள் வருகைத் தரும் எதிர்பார்ப்புடன் உள்ள மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் விஸா கட்டணத்திற்கு விசேட சலுகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாட்டை …

மேலும் வாசிக்க

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு: டோங்காவில் சுனாமி எச்சரிக்கை!

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசிபிக் நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கணொளியில் கடலோரப் பகுதிகளில் பெரிய அலைகள் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களை மூழ்கடிப்பதைக் காட்டுகிறது. டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அமுலில் உள்ளதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுகுவாலோஃபா முழுவதும் சைரன்கள் ஒலிப்பதாக செய்திகள் உள்ளன, மேலும் பொலிஸார் மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு …

மேலும் வாசிக்க