Latest News
Home / உலகம் (page 4)

உலகம்

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைப் பேசியில் பேசி, அவருக்கு ஒற்றுமையை உறுதி செய்ததாக ஜேர்மனி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ‘ஐரோப்பாவில் ஒரு நிலப் போர் உள்ளது, அது வரலாற்று புத்தகங்களில் மட்டுமே உள்ளது என்று நாங்கள் நினைத்தோம். இது சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்’ என்று …

மேலும் வாசிக்க

உக்ரைனின் எல்லை நாடான துருக்கி ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு!

உக்ரைனின் எல்லை நாடான துருக்கி, ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை மேற்குல நாடுகள், ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போதைக்கு உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்பும் எண்ணம் இல்லை எனவும், அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் துருப்புகளை அனுப்பப்போவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோன்று ரஷ்யாவின் நடவடிக்கைகள் நியாயமற்றவை என ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் எமது தாய் நாட்டிற்காக போராடி வருகிறோம் என களத்திலுள்ள …

மேலும் வாசிக்க

உக்ரைன் மீது ரஷியா குண்டுத் தாக்குதல்… பதட்டம் அதிகரிப்பு

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா …

மேலும் வாசிக்க

70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதியானது!

95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வாரம் விண்ட்சரில் தனது கடமைகளைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரண்மனை அறிவித்துள்ளது. சிம்மாசனத்தின் வாரிசான இளவரசர் சாள்ஸ் இரண்டாவது முறையாக கோவிட்க்கு நேர்மறை சோதனை செய்த வாரத்தில் இளவரசர் சார்ல்ஸுடன் ராணி நேரடி தொடர்பில் …

மேலும் வாசிக்க

1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் …

மேலும் வாசிக்க

சீனாவில் முடக்கல்நிலை ஏற்படுத்தியுள்ள விளைவுகள்!

எதிர்வரும் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவதற்கு சீனா தயாராகி வரும் நிலையில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, சீனாவின் சியான் நகரம் உட்பட பல நகரங்களை அச்சுறுத்தி வருகின்றது. குறித்த பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு வாரங்களுக்கு கடுமையான விதிகளுடன் கூடிய முழுமையான முடக்கல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. திடீர் கட்டுப்பாடுகள் மற்றும் திட்டமிடப்படாத முடக்கல்கள் காரணமாக அந்நாட்டில் 13 மில்லியன் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் உணவு …

மேலும் வாசிக்க

5 நாள் ​போராட்டத்தின் முடிவாய் ரயனின் குரல் ஓய்ந்தது

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ரயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் …

மேலும் வாசிக்க

ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி கொல்லப்பட்டதாக ஜோ பைடன் அறிவிப்பு!

சிரியாவில் ஐ.எஸ் குழுவின் மூத்த தலைவர் அபு இப்ராஹி (அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி) அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகின் முன்னிருந்த ஒரு பெரிய பயங்கரவாத அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. அமெரிக்க படையினரின் ராணுவ நடவடிக்கையின் கடைசி கட்டத்தில், குரேஷி ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்து தன்னையும் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் மாய்த்துக் …

மேலும் வாசிக்க

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை!

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது. ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால …

மேலும் வாசிக்க

Paxlovid மாத்திரைக்கு நிபந்தனையுடன் அனுமதி!1

Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் Paxlovid மாத்திரைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி, ஜேர்மனி பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனாவினால் மோசமாகப் பாதிக்கப்படும் அபாயமுள்ள முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க குறித்த மாத்திரை பயன்படுத்தப்படவுள்ளது. நோய்த்தொற்று அபாயம் …

மேலும் வாசிக்க