Latest News
Home / உலகம் (page 3)

உலகம்

இலங்கை – இந்தியா விமான சேவையை குறைக்க எயார் இந்தியா நடவடிக்கை!

இலங்கை – இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது வாரத்திற்கு 16 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை 13 ஆவதாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் …

மேலும் வாசிக்க

உலக அமைதியை நிலைநாட்ட கூட்டு ஒத்துழைப்பு அவசியம்: அமெரிக்காவுக்கு சீனா அழைப்பு!

உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்க அமெரிக்கா மற்றும் சீனா கூட்டாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்ந்து 25ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சீன மற்றும் அமெரிக்க தலைவரகள் இருவரும் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர் இதன்போது கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி …

மேலும் வாசிக்க

தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் என அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேட்டோ பிரதேசத்தின் …

மேலும் வாசிக்க

மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யாவும் உக்ரைனும் தீர்மானம்!

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அமெரிக்கா, நேட்டோ …

மேலும் வாசிக்க

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா இந்த போர் நிறுத்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வௌியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு …

மேலும் வாசிக்க

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என …

மேலும் வாசிக்க

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் தலைமையில் ஜெனீவா தலைமையகத்தில் ஆரம்பமாகும் இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 1ம் திகதி வரை நடைபெற உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 49 ஆவது அமர்வில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டுக்கு …

மேலும் வாசிக்க

உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளலாம்: அமெரிக்கா அச்சம்!

உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளனர். அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசிக்கு அளித்த செவ்வியில், ‘வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலை நடத்துவதுடன், தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனில் உள்ள பிற முக்கிய நகரங்களைத் தாக்குவது …

மேலும் வாசிக்க

பேச்சுவார்த்தைக்கு தயார் – ரஷ்யா திடீர் அறிவிப்பு!

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றிலிருந்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கிறது. போர் என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் இன்னும் தொடுக்கப்படவில்லை. உக்ரைனில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் உலக நாடுகள், இந்த விவகாரத்தை கவனமாக கையாண்டு வருகின்றன. …

மேலும் வாசிக்க

உக்ரைனில் வாழும் தமிழர்கள், உதவிக்கு தொடர்பு கொள்ள முடியும்!

உக்ரைனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது. அந்த விவரங்கள்:

மேலும் வாசிக்க