Latest News
Home / உலகம் (page 2)

உலகம்

நேபாளத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் வீழ்ந்து விபத்து!

நேபாளம்–பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காத்மண்டு விமான நிலையத்திலிருந்து 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமானத்தில் தீ பரவியுள்ளதோடு பயணிகளை மீட்பதற்கான மீட்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதேவேளை நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில், சுமார் 30 விமான விபத்துக்கள் நேர்ந்துள்ளதோடு கடந்த …

மேலும் வாசிக்க

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் விரைவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவை வெளியிடவுள்ளது. இதன்படி, அந்நிறுவனம் தனது புதிய ரேட்டிங் முறையை பயன்படுத்தி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. செயல்திறன் சரியில்லாத 6 சதவீதம், சுமார் பத்தாயிரம் ஊழியர்களின் பணிநீக்கம் அடுத்த ஆண்டு …

மேலும் வாசிக்க

குரங்கம்மை நோய்: மெக்ஸிகோ, அயர்லாந்து- அர்ஜெண்டீனா நாடுகளிலும் பரவியது!

பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் சுகாதார நிறுவனம் நாட்டிலேயே முதல் குரங்கம்மை நோய் தொற்றை பதிவுசெய்துள்ளது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா மாறியுள்ளது. இரண்டு …

மேலும் வாசிக்க

அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு

நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியில் இருந்து அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஒருவர் தெரிவாகியுள்ளார். இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தனி ஆல்பனிஸ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியிருந்தது. அவுஸ்ரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மொத்த 151 உறுப்பினர் …

மேலும் வாசிக்க

போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதில் இருந்து 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் குருதிஹா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 424 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மனித உரிமைகள் ஒம்பூட்ஸ்மேன் லியுட்மிலா டெனிசோவா இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியது உக்ரைன்!

தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளில் 3இல் ஒரு பங்கு, உக்ரைன் வழியாக குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 11 வாரங்கள் ஆன நிலையிலும், அந்த நாட்டு வழியாக இதுவரை ரஷ்ய எரிபொருள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு …

மேலும் வாசிக்க

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில் யு.எஸ்.எஸ். போர்ட் றோயல், டிகோண்டெரோகா வகுப்பு வழிகாட்டி-ஏவுகணை கப்பல் சென்றதாக அமெரிக்க கடற்படை கூறியது. தனது சுயமாநிலமாக சீனா கருதும் தாய்வானைச் சுற்றி தொடர்ந்தும் ரோந்து பணிகளில் அமெரிக்க கடற்படையும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, 18 போர் …

மேலும் வாசிக்க

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு!

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கனடாவின் ‘மெடிகாகோ’ உயிரிதொழில் நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயற்பட அவற்றுடன் ‘ஏஎஸ் 03’ என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை 85 மையங்களில் 24 ஆயிரத்து 141 பேரிடம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டதில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எவருக்கும் தீவிரமான கொரோனா …

மேலும் வாசிக்க

இலங்கை தமிழர்களுக்கு உணவு தானியங்கள்!

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப விரைவில் உரிய வசதி செய்துதர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கைத் தமிழர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கி …

மேலும் வாசிக்க

கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவிப்பு

கருங்கடலை பாதுகாக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 50-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த …

மேலும் வாசிக்க