Latest News
Home / உலகம்

உலகம்

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து இதன்போது ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், …

மேலும் வாசிக்க

500 வது நாளில் உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து சனிக்கிழமையுடன் 500 நாள்கள் நிறைவு பெறுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949 ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு தொடங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இவற்றுடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் …

மேலும் வாசிக்க

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். எப்படி அனைத்து திருடர்களும் ´மோடி´ என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று …

மேலும் வாசிக்க

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதன்போதே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

நியூஸிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி!

ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி …

மேலும் வாசிக்க

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை – உலக வங்கி

இலங்கை உள்ளிட்ட ஏனைய நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த அவர், இலங்கையின் கடனை விரைவாக மறுசீரமைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். சாம்பியா புரிந்துணர்வு ஒப்பந்தம், கானா உத்தியோகப்பூர்வ கடனாளிகள் குழு, எத்தியோப்பியா மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் நிதி உறுதிப்பாடுகள் போன்ற தீர்வுகளை …

மேலும் வாசிக்க

நேபாளத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் வீழ்ந்து விபத்து!

நேபாளம்–பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காத்மண்டு விமான நிலையத்திலிருந்து 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமானத்தில் தீ பரவியுள்ளதோடு பயணிகளை மீட்பதற்கான மீட்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதேவேளை நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில், சுமார் 30 விமான விபத்துக்கள் நேர்ந்துள்ளதோடு கடந்த …

மேலும் வாசிக்க

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் விரைவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவை வெளியிடவுள்ளது. இதன்படி, அந்நிறுவனம் தனது புதிய ரேட்டிங் முறையை பயன்படுத்தி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. செயல்திறன் சரியில்லாத 6 சதவீதம், சுமார் பத்தாயிரம் ஊழியர்களின் பணிநீக்கம் அடுத்த ஆண்டு …

மேலும் வாசிக்க

குரங்கம்மை நோய்: மெக்ஸிகோ, அயர்லாந்து- அர்ஜெண்டீனா நாடுகளிலும் பரவியது!

பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் சுகாதார நிறுவனம் நாட்டிலேயே முதல் குரங்கம்மை நோய் தொற்றை பதிவுசெய்துள்ளது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா மாறியுள்ளது. இரண்டு …

மேலும் வாசிக்க