Latest News
Home / இலங்கை (page 107)

இலங்கை

மீள் மதிப்பீட்டின் ஊடாக C யில் இருந்து A யாக மாறிய பெறுபேறு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன. இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார். அத்துடன் வேதியியல் மற்றும் இயற்பியலில் பாடங்களில் …

மேலும் வாசிக்க

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம்!

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. அதன்படி பயிற்சியில் இருக்கும் 51,000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. 2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி …

மேலும் வாசிக்க

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 750 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாயிலிருந்து 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முட்டையொன்றின் விலை 3 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 26 ரூபாயாக …

மேலும் வாசிக்க

மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் – வானிலை அதிகாரி

வடக்கு வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும், மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ அவ்வப்போது பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பரவலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்ற இந்நிலையில் தற்கால வானிலை நிலவரம் தொடர்பில் (திங்கட்கிழமை) தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் …

மேலும் வாசிக்க

பிரதமர் மஹிந்த இராஜினாமா குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவலை பிரதமர் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என்றும், புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகின. எவ்வாறாயினும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

நாடளாவிய ரீதியில் உள்ள கிராமிய , நகர்ப்புற பாடசாலைகள் ,வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடாநெடுஞ்சாலைகள் அமைச்சர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாடசாலை மற்றும் வைத்தியசாலை வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதலாவதாக குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று 02.01.2022 கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் …

மேலும் வாசிக்க

பயிலுனர் பட்டதாரிகளுக்கு நாளை நிரந்தர நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்த்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சரவை உபகுழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலவசக் கல்வியின் பிரதிபலனாக உயர்கல்வி கற்றவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக இந்த நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது. 53 ஆயிரம் பயிலுனர் பட்டதாரிகள் …

மேலும் வாசிக்க

பாடசாலை ஆரம்பம் தொடர்பான அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (03) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக சுமார் ஆறு மாதங்களுக்கு பாடசாலைகள் மூட வேண்டியிருந்தது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு முடிவடையும் பாடசாலை விடுமுறையை 10 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் வாசிக்க

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் !

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் …

மேலும் வாசிக்க

பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை அவசியமா – அரசாங்கத்தின் அறிவிப்பு!

பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தடுப்பூசி அட்டையை எடுத்துச்செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது போன்ற பிற காரணிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும் என்று விளக்கினார். தடுப்பூசி அட்டையை எடுத்துச் …

மேலும் வாசிக்க