Latest News
Home / ஆலையடிவேம்பு (page 79)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு….

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த தற்போது கந்தளாய் பிரதேசத்திற்குட்பட்ட சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பணி புரிகின்ற பொலிஸ் பரிசோதகர் மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் நேற்றய தினம் (11) பொலிஸ் திணைக்களத்தால் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்று எமது சமூகத்திற்கு பெருமையினைச் சேர்த்துள்ளார். மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று 08, ஆலையடிவேம்பு பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1988.05.02 ஆந் தினம் இலங்கை பொலிஸ் சேவையில் உதவி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்கள் பல நாட்களின் பின்னர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.

வி.சுகிர்தகுமார்  ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை தடையின்றி மேற்கொண்டதுடன் அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததை அவதானிக்க முடிந்தது. அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்தில் இருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றதுடன் பயணிகளும் பஸ் நிலையத்தில் காத்திருந்ததை காணமுடிந்தது. அரச அலுவலங்களில் இன்று காலை தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச சுகாதார வைத்திய …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச மேட்டுநிலப்பயிற்ச் செய்கையாளர்கள் சிறந்த விளைச்சலை பெற்றபோதும் – விற்பனை செய்ய முடியாமல் கவலையுடன் பெரும் நஷ்டத்தில்!!!

வி.சுகிர்தகுமார் சிறந்த விளைச்சலை நாம் பெற்றபோதும் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடுகின்றோம். இதனால் நாம் பெரும் நஷ்டத்தினையும் எதிர்கொண்டுள்ளோம் என அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மேட்டுநிலப்பயிற்ச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்தனர். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி தங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேட்டுநில பயிற்ச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு அரசாங்கமும் விவசாய அமைச்சு மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களும் பல்வேறுபட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச குழந்தைகள் நலன் கருதி அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினால் பால்மா பைக்கற்றுக்கள் வழங்கிவைப்பு….

வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக தொழிலை இழந்த பல குடும்பங்களின் குழந்தைகள் நலன் கருதி பால்மா பைக்கற்றுக்ளை வழங்கும் பணியினை  அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் 70 குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்களை வழங்கி வைத்தனர். நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சில குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்களை பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனை கருத்தில் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி உலர் உணவுப்பொதி…

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நலன்சார் உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக சுவாட் நிறுவனமானது சுவிஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி உதவியுடன் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதியினை வழங்கி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாதிக்கப்பட்ட …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதி….

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நலன்சார் உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக சுவாட் நிறுவனமானது சுவிஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி உதவியுடன் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதியினை வழங்கி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 156 …

மேலும் வாசிக்க

பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு 15 ஆயிரம் மாத்திரை உறைகள்அன்பளிப்பு . அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பு

வி.சுகிர்தகுமார்   அரச வைத்தியசாலைகளின் சிறந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும்  நோக்குடன் அங்குள்ள சிறிய தேவைப்பாடுகளை நிறைவேற்றி வினைத்திறனான சேவையினை அதிகரிக்கும் பணியில் தனியார் சமூக அமைப்புக்களும் கைகோர்த்து செயற்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினரும் அரச வைத்தியசாலைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் சேவையினை வளப்படுத்தும் முகமாக அங்கு தேவைப்பாடாக இருந்த மாத்திரைகள் உறைகளை இன்று வழங்கி வைத்தனர். …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு படைப்பான ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடல் முதல் பார்வை…

நம் நாட்டவர்களின் படைப்பாக ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடலின் முதல் பார்வை சமுகத்தளங்களில் வெளியிடப்பட்டு பாடலிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. ”தாயகமே விழித்திடு” என உபதலைப்பிடப்பட்ட இந்த பாடல் எமது ஆலையடிவேம்பினை சேர்ந்த கலைஞர்களால் முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட படைப்பு என்பது சிறப்புக்குரியது. பாடலுக்கான இசையினை S.கிருஷ், பாடலுக்கான வரிகளை V.T.செல்வி, பாடலை பாடியவர்கள் – A.கிஷோர், M.ஜினோச், V.T.செல்வி, M.ரம்மியா S.ஜதுர்சா மேலும் Mastering and Mixing …

மேலும் வாசிக்க

கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை!!

வி.சுகிர்தகுமார்   கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 12 நாட்களின் பின்னர் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் ஏற்படுத்தப்பட்ட சந்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த நாட்களில் அக்கரைப்பற்று சாகாம …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்டது! சந்தை தர்சங்கரி மைதானத்திற்கு இடமாற்றம்.

வி.சுகிர்தகுமார்  ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது. ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையங்கள் யாவும் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறான சுமூக நிலை இன்று உருவானதை அவதானிக்க முடிந்தது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி …

மேலும் வாசிக்க