Latest News
Home / ஆலையடிவேம்பு (page 72)

ஆலையடிவேம்பு

பிரதமராக மகிந்த ராஜபக்க்ஷ பதவியேற்றதை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சி -அம்பாரை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள்….

வி.சுகிர்தகுமார்   நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றதை தொடர்ந்து மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பதவியேற்பை கொண்டாடும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகளை எற்பாடு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் கோளாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்திற்கு முன்பாகவும் நவசிகல உறுமய கட்சியின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட தலைமை வேட்பாளரும்; தேர்தலின்போது பொதுஜன …

மேலும் வாசிக்க

பாடசாலைகள் நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளில் சிரமதானங்கள்….

ஜினுஜன்,கிஷோர் இலங்கையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த நான்காம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் முழுமையாக ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள் அனைத்திலும் பாடசாலைகளின் அதிபர்கள் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு திருநாவுக்கரசு வித்தியாலயம், அன்னை சாராத வித்தியாலயம், ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை என அனைத்து பாடசாலைகளும் பாடசாலைகளிலும் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நாளை சிரமதானம் – பாடசாலையின் அதிபர் அழைப்பு….

ம.கிரிசாந் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு நாளை (09) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் இடம்பெறவுள்ளது. கொரோனா அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து வருகின்ற (10) திங்கள்கிழமை அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை மீள ஆரம்பமாக இருக்கின்றது. அந்த நிலையில் இந்த சிரமதான நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் பங்குகொண்டு உதவுமாறு பாடசாலையின் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க

பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்!!!

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்ததுடன் கச்சான் பயிரையும் சேதமாக்கியது. இதன் பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கட்டடத்தின் கதவுகளை உடைத்த யானை அருகில் இருந்த கவடாப்பிட்டி கிராமத்தில் நுழைந்து அங்கிருந்த கடையொன்றினையும் தாக்கி சேதப்படுத்தியது. இச்சம்பவம் நேற்றிரவு(01) நடைபெற்றுள்ள நிலையில் யானைகள் அங்கிருந்து அகன்று அருகில் …

மேலும் வாசிக்க

செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் – ஆலையடிவேம்பில் டக்ளஸ் தேவானந்தா

வி.சுகிர்தகுமார்   செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அம்பாரை மாவட்டத்திற்கான விஜயமொன்றை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்; அம்பாரை மாவட்ட முதன்மை வேட்பாளர் துரையப்பா நவரெட்ணராஜாவின் அழைப்பின் பேரில் மேற்கொண்ட அவர் ஆலையடிவேம்பு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆளுங்கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு – தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் ஊடகவியலாளர் மாநாடு…

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தமது முழு ஆதரவையும் பொதுஜன பெரமுனவிற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று தெரிவித்தனர். சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் தங்கையா கிரோஜாதரன் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே இத்தீர்மானத்தை உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டனர். ஆலையடிவேம்பு பிரதேச சபையினை கடந்த இரு வருடங்களாக தமிழர் விடுதலை கூட்டணி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் மொட்டுக்கட்சியின் அலுவலக திறப்பு விழா – நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் இணைவு!

வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டது. அம்பாரை மாவட்ட நவசிகல உறுமய கட்சியின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் தாமோதரம் ஜெயாகர் தலைமையிலான 10 வேட்பாளர்களும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மொட்டுக்கட்சியின் தலைமை வேட்பாளருமான விமலவீர திசாநாயக்க மற்றும் வேட்பாளர் வீரசிங்க ஆகியோர் முன்னிலையில் மொட்டுக்கட்சியுடன் இணைந்து கொண்டனர். அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளராக த.கிறோஜாதரன் அவர்கள் இன்று (21) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினமே தவிசாளர் பதவியினை பொறுப்பேற்று கொண்டார். ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்காமல் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி – (த.கிறோஜாதரன் உறுப்பினர் பிரதேச சபை) …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு-100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம்

வி.சுகிர்தகுமார்   ஆலையடிவேம்பில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதுடன் 100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்  தெரிவித்தார். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று 300இற்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையின் போதே குறித்த இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் …

மேலும் வாசிக்க

சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகை – அறுபது ஆண்டுகளின் பின்னர் ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலை புனருத்தாரணம் செய்யமுயற்சி…

வி.சுகிர்தகுமார் மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசன் ஆஷ்ரமா மற்றும் சிறுவர் இல்லத்தின் சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் அவர்கள் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார். அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்திற்கு வருகை தந்த சுவாமி உள்ளிட்டவர்களை இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் தலைமையிலான இயக்குனர் சபை உறுப்பினர்கள் இராமகிருஸ்ண மிசன் பழைய மாணவர்கள் மற்றும் இல்ல மாணவர்கள் பொதுமக்கள் இணைந்து வரவேற்றனர். வருகை தந்த சுவாமி …

மேலும் வாசிக்க