Latest News
Home / Kirishanth admin (page 553)

Kirishanth admin

அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்!

மூன்றாம் உலக போர் எப்போது ஆரம்பமாகும் என உலகநாடுகளே அச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில், அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவே பல அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என முத்திரை குத்தி வந்தநிலையில், முதல்முறையாக அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் இராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. இதற்காக ஈரான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் …

மேலும் வாசிக்க

4 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியருக்கு விளக்கமறியல்

அம்பாறையில் பாடசாலை மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த சம்பவத்தில் கைதான வைத்தியர் அம்பாறை நீதிமன்ற நீதவான் அசாங்கா கிட்டியாவத்த முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை – உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய வைத்தியசாலையில் …

மேலும் வாசிக்க

2020 இல் மாற்றங்களுடன் புதிய தோற்றத்தில் ஐபோன்கள் !

சில நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள்  நவீன கலாச்சாரத்தை உருவாக்கும் கருவியாக மாறி வருகின்றது.  இதில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள்  உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றவை, இதன் ஒவ்வொரு புதிய வரவும் பல குறை பாடுகளை நீக்கி புதிய தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்படுகின்றது.   2020 இல் ஆப்பிள் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஐபோன் மொடல்களில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இது வரை …

மேலும் வாசிக்க

இம்முறை ஜெனிவாவில் இலங்கையின் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட தீர்மானம் – சுமந்திரன்

போர் குற்றங்களில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை ஏற்றுவிட்டு இப்போது அதிலிருந்து விலகி நிற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.   அத்துடன்  இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் என்ன சொல்லப்போகின்றனர் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை ஆதரித்ததன மூலம் …

மேலும் வாசிக்க

வெள்ளை வான் ஊடகச் சந்திப்பு – சந்தேகநபர்கள் மூவரும் பிணையில் விடுதலை

வெள்ளை வான் ஊடகச் சந்திப்பு தொடர்பாக கைதான சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் தலா 5 லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரென கைதுசெய்யப்பட்ட அரச, மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டும் 5 லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர்களை பிணையில் விடுதலை செய்வதாக …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!

ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையினை கோரியுள்ளார். இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளரான மோஹன் டி சில்வா உறுதி செய்துள்ளார். மேலும், தன்னை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் தனது …

மேலும் வாசிக்க

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகின!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சி.ஐ.டி. மூத்த அதிகாரிகளுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு ரஞ்சன் ராமநாயக்க அழுத்தம் கொடுத்ததாக இந்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த தொலைபேசி உரையாடல் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் …

மேலும் வாசிக்க

பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை!

பல்கலைக்கழங்களில் பகிடிவதை நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதற்கமைய பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர். அதேவேளை பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடங்களுக்கு பரீட்சை …

மேலும் வாசிக்க

எனது வாக்குவங்கியையும் அதிகரிக்க வேண்டும்: என்னையும் கைதுசெய்யுங்கள் – மனோ

அரசாங்கத்தால் கைது செய்யப்படுபவர்களின் வாங்கு வங்கி அதிகரிப்பதால், தன்னையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேட்டையாடும் நடவடிக்கையைக் கைவிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக விசாரணையை நடத்துமாறும் அர்ஜூன மகேந்திரணை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு …

மேலும் வாசிக்க

புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் – மாலிங்க!

புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் என இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு இருபது போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே லசித் மாலிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறினாலே நான் ஓய்வு …

மேலும் வாசிக்க