Latest News
Home / Kirishanth admin (page 30)

Kirishanth admin

கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா….

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கிழக்குப் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் மாபெரும் விழாவாக இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தினம்…..

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2023 ஆம் ஆண்டுக்கான திருக்கோவில் கல்வி வலய, அகில இலங்கை தமிழ் மொழித்தினம் திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் 22/07/2023 இன்றைய தினம் சிறப்பாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. K. கமலமோகனதாசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. இரா. உதயகுமார் அவர்களும், ஆலையடி வேம்பு …

மேலும் வாசிக்க

பால்குடப்பவனி பொத்துவில் ஸ்பற்ரர் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ரொட்டை வீரையடி பிள்ளையார் நோக்கி…

சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை தனிக்கோவில் கொண்டு நாடிவரும் அடியவர்களின் குறைநிறை தீர்க்கும் வீரயடி நாயகனாம் பொத்துவில் ரொட்டையில் வீற்ருக்கும் வீரயடி பிள்ளையார் ஆலயத்தின் மாகாகும்பாபிஷேகமானது கடந்த 2023/07/09 திகதி இடம்பெற்று. அதனை தொடர்ந்து 12 நாட்கள் மண்டலப்பூசை நிகழ்வுகள் இடம்பெற்று வந்தநிலையில் இன்றைய தினம் ரொட்டை வீரடிபிள்ளையாருக்கு 108 சங்குகளை கொண்ட சங்காபிஷேகமானதத்தின் பால் ஆனது பொத்துவில் ஏத்தம் ஸ்ரீ சாலம்பையடி விநாயகர் ஆலயத்தில் இருந்து பிரதான …

மேலும் வாசிக்க

அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி 328 பொருட்கள் மீதான தடை இன்றிரவு முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

42மேலதிக வாக்குகளால் மத்திய வங்கி சட்டமூலம் நிறைவேற்றம்!

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது. அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. குறித்த மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தினம் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில்….

 -ம.கிரிசாந்- முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தின நிகழ்வு இந்து மாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இன்று (19) மாலை 04.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்றத்தின் தலைவர் திரு.வே.சந்திரசேகரம், செயலாளர் ஶ்ரீ.மணிவண்ணன், உறுப்பினர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்கள் என்பவர்கள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வு விசேட பூசை நிகழ்வுடன் ஆரம்பமாகியதுடன் அதனைதொடந்து ஆசியுரை, …

மேலும் வாசிக்க

உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவத்தை மையமாக கொண்டு அக்கரைப்பற்றில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை….

  உகந்தை மலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இடம்பெறுகின்ற ஆடிவேல் மகோற்சவத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் அக்கரைப்பற்றில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்ல ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இவ் புனித யாத்திரை ஆலய தீர்த்தோற்சவத்தை மையமாக கொண்டு 26/07/2023 புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ வினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து யாத்திரை ஆரம்பமாகும். …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் இவ் வருடத்தில் ஐந்தாவது சம்பியன் கிண்ணத்தையும் வெற்றிகொண்டது…..

சுவாட்டி அணியின் ஏற்பாட்டில் அமரர் இராமச்சந்திரன் தனேஸ் ஞாபகார்த்த கிண்ணமானது அணிக்கு 11 பேர் 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக 64 கழகங்களை இணைத்து கோட்டை கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது. இந்த தொடரில் ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதி வரை முன்னேறி இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகத்துடன் பலப்பரீட்சை நடத்தி ஐந்தாவது சம்பியன் கிண்ணத்தையும் வெற்றி கொண்டது. இந்த சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் …

மேலும் வாசிக்க

காய்கறிகள் விலை அதிகரிப்பு, கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளது !

ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1450 ஆக குறைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். அதேசமயம், காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அண்மையில் பெய்த மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பழங்களின் விலையும் …

மேலும் வாசிக்க

தந்தை மற்றும் மாமனார் இணைந்து 7 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை கைது செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாயார் கடந்த 3 மாத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையாருடன் வாழ்ந்து வந்த சிறுமியை 49 வயதுடைய தந்தையும் 52 வயதுடைய மாமனாரும் இணைந்து கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கிறனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் …

மேலும் வாசிக்க