Latest News
Home / Kirishanth admin (page 10)

Kirishanth admin

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி,  346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன்  92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக …

மேலும் வாசிக்க

லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றம்!

இன்று முதல் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4,250 ரூபாவாக விற்பனையாகவுள்ளது இதேவேளை 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு விலை 795 ரூபாவாக விற்பனையாகவுள்ளது மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,707 …

மேலும் வாசிக்க

இலங்கை பெண்கள் குறித்து அதிர்ச்சி தகவல்

இந்த வருடம் இணையத்தின் ஊடாக இடம்பெற்ற பண மோசடிகள் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப்பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி தெரிவித்தார். தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு விசேடமாக பெண்களே சிக்கியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

ஜனவரி முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு

VAT அதிகரிப்புக்கு ஏற்ப 2024 ஜனவரி முதல் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 3% நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு!

கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களாக கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் மற்றும் பல்வேறு சுவாச நோய்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கு நாளாந்தம் வருகைதரும் நோயாளர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். இந்த நிலையில், …

மேலும் வாசிக்க

VAT வரி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம்! முழு விபரம் இதோ!

பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார். “பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டம் மற்றும் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் நேற்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் …

மேலும் வாசிக்க

உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்தவும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்வதும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றுக்கு நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட வினாப்பத்திரங்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குவதாக அல்லது அதற்கு …

மேலும் வாசிக்க

எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம்!

எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார். அதன்படி, எரிபொருளுக்கான 18 சதவீத VAT வரியை அமல்படுத்தும்போது, ​​ 7.5 சதவீத துறைமுகம் …

மேலும் வாசிக்க

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலைகள் குறைப்பு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் முட்டைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். தொடர்ந்து சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு முட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டிகை காலங்களில் முட்டையின் தேவை அதிகமாக …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினர் இணைந்து சாதனையாளர்கள் பாராட்டு விழா….

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம், இந்து இளைஞர் மன்றத்தினரால் சாதனையாளர்கள் பாராட்டு விழா மற்றும் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு என்பன நேற்றயதினம் (27) மாலை 3.30 மணியளவில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் திரு.த.கயிலாயபிள்ளை அவர்கள் தலைமையில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது. அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ், …

மேலும் வாசிக்க