Latest News
Home / Kirishanth admin

Kirishanth admin

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 ம் திகதி தர்மசங்கரி மைதானத்தில் (S.R.K தேசிய கல்லூரிக்கு அருகாமையில்) பி.ப 07 மணியளவில் தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்குடன் பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூகங்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சமூக புரிந்துணர்வை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கும் நோக்குடனும், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் “வெற்றிக்கான நெறியாள்கை” விழிப்பூட்டல் கருத்தரங்கு…..

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் “வெற்றிக்கான நெறியாள்கை” எனும் தலைப்பில் அண்மையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் கற்கும் மாணவர்களுக்காக பரீட்சைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது சம்பந்தமான ஓர் விழிப்பூட்டல் கருத்தரங்கு இன்று (08) நடைபெற்றது. கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் திருமதி ரவிலேகா நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றதுடன். நிகழ்வில் பிரபல மருத்துவத்துறை பேராசிரியர் கலாநிதி மார்க்கண்டு திருக்குமார் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார். …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளில் ”பசுமை மீட்சிப் போராட்டம்” மின்மினி மின்ஹா இன் விழிப்புணர்வு பிரச்சாரம்….

பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை சது/அல்/அர்சத் மகா வித்தியாலயத்தின் மாணவியான செல்வி J.பாத்திமா மின்ஹா (மின்மினி மின்ஹா) மேற்கொண்டு வருகின்ற நிலையில். ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளான அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை), க்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலை, திருநாவுக்கரசு வித்தியாலயம் ,கண்ணகி வித்தியாலயம் மற்றும் புனித சவேரியார் வித்தியாலயம் ஆகிய …

மேலும் வாசிக்க

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் பாடசாலை பதில் அதிபர் திரு.K.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்கள் தங்களது ஆக்க பூர்வமான புத்தாக்க கண்டு பிடிப்புங்களை காட்சிப்படுத்திருந்தனர். மேலும் இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.K. கமலமோகனதாசன், Dr. திருமதி.சி. குணாளினி- MO (பிரதேச வைத்திய சாலை பனங்காடு) …

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராஜேந்திரன் அபிராஜ்

எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் இராஜேந்திரன் அபிராஜ் அவர்கள் நேற்று (29.03.2024) வெள்ளிக்கிழமை தனது 22வது பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் இராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்துகின்றனர். மேலும் இராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் வாசிக்க

2ஆம் ஆண்டு நினைவஞ்சலி ரத்னம் நடராஜன் (மூத்த ஊடகவியலாளர்)

அக்கரைப்பற்றினை பிறப்படமாகவும் பனங்காடு பிரதேசத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்த ஊடகவியலாளர் ரத்னம் நடராஜன் அவர்களின் 02 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டான கிரிகைகள் இன்றைய தினம் (03) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். ஆண்டுகள் இரண்டு ஆனாலும் ஆறவில்லை எங்கள் மனம் நேற்றுப்போல் உள்ளதப்பா நினைக்கும் போதெல்லாம் ஏற்க முடியவில்லை ஏங்கித் தவிக்கின்றோம்! கண்ணுக்குள் ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய் என்றும் எங்களோடு …

மேலும் வாசிக்க

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது 27/03/2024 பாடசாலையின் அதிபர் ச. திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது இம்மாதம் 29, 30, 31ம் திகதிகளில் திருக்கோயில், அக்கரைப்பற்று பிரதேசங்களில் நடாத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். உள்ளூர் கிரிக்கெட் பிரியர்களையும் இளந்தலைமுறை கிரிக்கட் விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தும் முகமாகவும் மேலும் அவர்களுக்கு சிறந்த விளையாட்டு வழிகாட்டுதலுக்குமாக, நாற்பது வயதிற்கு மேற்பட்ட …

மேலும் வாசிக்க

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகாசக்தியின் செயலாளரும் முகாமையாளருமா S.திலகராஜன், கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர் K. காந்தரூபன், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….

 -ஹரிஷ்- ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (22) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் J.நிரோஜினி, T.குலதர்ஷினி மற்றும் S.சிந்துஜா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், திருக்கோவில் வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் S.விவேகானந்தராஜா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் முகாமைத்துவ …

மேலும் வாசிக்க