Latest News
Home / abiraj

abiraj

ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் ”e-கல்வி திறன் வகுப்பறை” திறப்பு விழா…

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் e-கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் (05) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.த.இராசநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி.ந.புள்ளநாயகம் (மாகாணக்கல்விப் பணிப்பாளர் – கிழக்கு மாகாணம்) , விசேட அதிதியாக திரு.யோ.ஜெயச்சந்திரன் (வலயக்கல்விப் பணிப்பாளர்- திருக்கோவில்) அவர்களும் மேலும் சிறப்பு அதிதிகள் , கௌரவ அதிதி , பாடசாலை …

மேலும் வாசிக்க

வடக்கில் மேலும் 20 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 668 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ். மாவட்டத்தில் 18 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், யாழ். …

மேலும் வாசிக்க

அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம்- அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

தமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் என்று பல சவால்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ளன. எனவே, …

மேலும் வாசிக்க

நாட்டில் இன்றுமட்டும் 1,914 பேருக்குக் கொரோனா தொற்று!

நாட்டில் இன்றுமட்டும் மேலும் ஆயிரத்து 914 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்த நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 338ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 878 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், …

மேலும் வாசிக்க

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை அவர்களின் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கிளிநொச்சி வளாக பீடாதிபதிகளின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எனினும், …

மேலும் வாசிக்க

யாழ். மாவட்டத்தில் ஒரே தொகுதியில் 17,603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாக்காளர் சரிவு யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசனம் உள்ளிட்ட பலவேறு விடயங்களில் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் இறுதிசெய்யப்பட்டு கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்போது, கடந்த 2019ஆம் ஆண்டு பட்டியலில் நான்கு இலட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாக …

மேலும் வாசிக்க

மதுவரித் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மதுவரித் திணைக்களத்தின் அனுமதி பெற்ற சகல நிலையங்களுக்குமான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இன்று (வியாழக்கிழமை) இந்த கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த வழிகாட்டல்களுக்கு அமைய மதுவரித் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மதுபானசாலைகள் அனைத்தும் அனுமதி வழங்கப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் திறக்கப்பட …

மேலும் வாசிக்க

இந்தியாவில் கொரோனா உச்சம்- ஒரேநாள் பாதிப்பு 4 இலட்சத்தைக் கடந்தது!

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாள் பாதிப்பு நான்கு இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நான்கு இலட்சத்து 12 ஆயிரத்து 618 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு இரண்டு கோடியே 10 இலட்சத்து 70 ஆயிரத்து 852ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஒரேநாளில் மூவாயிரத்து 982 பேர் …

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 238 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 745ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க