Latest News
Home / தொழில்நுட்பம் / 5G இனால் வலுவூட்டப்படும் Huawei Nova 7 SE

5G இனால் வலுவூட்டப்படும் Huawei Nova 7 SE

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமும், 5G தொழில்நுட்பத்தின் முன்னோடியுமான Huawei, முதல் நடுத்தர 5G ஸ்மார்ட்போனான Nova 7 SE இனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 5G அனுபவத்தைப் பெறக் காத்திருப்பவர்களுக்கு இதற்கு முன்னர் கண்டிராத செயற்பாட்டினை வழங்கும் பொருட்டு உயர் தர Kirin 820 5G SoC chip இனை கொண்டுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று 90.3% Screen body ( திரை உடல்) விகிதத்துடன் கூடிய Punch Full view திரையாகும். கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்ட Nova 7 SE, ஸ்பேஸ் சில்வர், க்ரஷ் பச்சை மற்றும் மிட்சமர் ஊதா ஆகிய மூன்று கவர்ச்சிகரமான வண்ண வகைகளில் வருகின்றது.

Huawei Nova 7 SE ஸ்மார்ட்போனானது மிகவும் வினைத்திறனான Kirin 820 5G Soc chip இனால் வலுவூட்டப்படுகின்றமையானது மொபைல் கேம்ஸ் பிரியர்களுக்கு மிக வேகமான செயற்பாட்டை வழங்குகின்றது. அல்ட்ரா கிராபிக்ஸ் உடனான Heavy gams (பளுவான கேம்ஸ்களை) விளையாடும் போது கூட எவ்வித பின்னடைவுகளும் இல்லாத செயல்திறனை வழங்குகிறது. மேலும், பாவனையாளர்கள் படங்கள், அப்ளிகேஷன்கள் மற்றும் கோப்புகளை நினைப்பதை விட வேகமாக தரவிறக்கம் செய்துகொள்ளக் கூடியமையானது Nova 7 SE இன் மீது உங்கள் கவனத்தை செலுத்துவதற்கான இன்னொரு காரணமாகும்.

Nova 7 SE, 8GB RAM இனையும் கொண்டுள்ளமையானது, அதன் உயர் செயல்திறன் மற்றும் பல பணிகளை மேற்கொள்ளத் தேவையான செயல்திறனைக் கொண்டதாக இதனை மாற்றியுள்ளது. மேலும் இதன் உள்ளமைக்கப்பட்ட 128GB நினைவகமானது பாவனையாளர்கள் இலகுவாக திரைப்படங்கள், பாடல்கள், அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை சேமிக்க உதவுகின்றது.

Nova 7 SE ஆனது Singer Plus, Singer Mega காட்சியறைகள் மற்றும் நாடுபூராகவும் உள்ள அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.64,999 என்ற அறிமுக விலையில் கிடைக்கின்றது.

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *