Latest News
Home / உலகம் / 4 பேர் பயணிக்கும் பறக்கும் கார் ; ஜப்பானில் வெள்ளோட்டம் வெற்றி..!

4 பேர் பயணிக்கும் பறக்கும் கார் ; ஜப்பானில் வெள்ளோட்டம் வெற்றி..!

ஜப்பானில், பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்குள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030க்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்கிற நிறுவனம், 4 பேர் பயணம் செய்யும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை தயாரித்துள்ளது. பெரிய அளவிலான ஆளில்லா விமானத்தின் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார், தலைநகர் டோக்கியோவில் சோதித்து பார்க்கப்பட்டது.

தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி எழுந்து பறக்கும் கார், 10 அடி உயரத்தில் ஒரு நிமிடத்துக்கும் மேலாக பறந்து, பின்னர் தரையிறங்கியது. இதன் மூலம், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக கூறிய என்.இ.சி. நிறுவனம், முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்து 2026-ம் ஆண்டுக்குள் இந்த பறக்கும் கார் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.

 

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *