ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தவிசாளர் த.கிறோஜாதரன் தலைமையில் 14 மேலதிக வாக்குகளால் பாரிய ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
சபையின் அமர்வு நேற்று (10/11/2022) புதன்கிழமை தவிசாளர் த.கிறோஜாதரன் தலைமையில் இடம்பெற்றதுடன். 16 உறுப்பினர்கள் கொண்ட சபையில் ஒருவர் அமர்வில் கலந்து கொள்ளாத நிலையில் கலந்து கொண்ட 15 உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவாகவும் ஒருவர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இதன் மூலம் 14 மேலதிக வாக்குகளால் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான 2023 ஆம் ஆண்டுக்கான செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த வருடம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.