Latest News
Home / சுவாரசியம் / 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் : காரணம் என்ன?

2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் : காரணம் என்ன?

ரஷ்யாவில் நபரொருவர் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை தீக்கிரையாக்கும் காட்சி சமூக ஊடகத்தில் வரலாகப் பரவி வருகின்றது.

சமூக வலைத்தளமான யூடியூப்பில் பிரபலமான மிகைல் லிட்வின் தனது ஆடம்பர மெர்சிடஸ் நிறுவன காரை வயற்காட்டு நடுவில் வைத்து தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

இதனைக் காணொளியாகப் பதிவு செய்து யூ டியூபில் பதிவேற்றியுள்ளார். 2.4 கோடி மதிப்பு கொண்ட மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் ரக சொகுசு காரை நிறுவனத்திடமிருந்து வாங்கியதிலிருந்து பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

கொழுந்து விட்டு எரியும் சொகுசு கார் மெர்சிடிஸ் டீலருக்கு ஐந்து முறை திருப்பி அனுப்பியும் இந்த காரின் பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை. மொத்தத்தில், கார் 40 நாட்களுக்கு மேல் பழுதுபார்க்கப்பட்டது. ஒரு சேவையில், ஜெர்மனியில் இருந்து புதியது ஆர்டர் செய்யப்பட்டு விசையாழி மாற்றப்பட்டு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் பிரச்னை தீராத நிலையில் மிகைல் தொடர்ந்து புகார் தெரிவித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் டீலர் அவரது அழைப்புகளுக்குப் பதிலளிப்பதை நிறுத்தினார்.

இதனைத் தொடர்ந்த டீலருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் தனது காரினை தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனை படமெடுத்த மிகைல் நான்கு நாட்களுக்கு முன்பு அவரது யூடியூப் சேனலில் அதனை பதிவேற்றியிருந்தார்.

டீலருடனான நீண்ட ச ண்டைக்குப் பிறகு இந்த காரினை என்ன செய்வது என்று யோசித்தபோது அதை கொளுத்துவது என்று முடிவெடுத்துக் கொளுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் மகிழ்ச்சியாக இல்லையென்றும் இந்த காணொளியில் அவர் கூறியுள்ளார். இந்த ப யங்கர காணொளியை இதுவரை யூடியூபில் 11 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கண்டு

Check Also

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *