Latest News
Home / தொழில்நுட்பம் / 11th Gen Intel Core Processors உடன் கூடிய புதிய டெல் மடிக்கணினிகளை வெளியிட்டுள்ள சிங்கர்

11th Gen Intel Core Processors உடன் கூடிய புதிய டெல் மடிக்கணினிகளை வெளியிட்டுள்ள சிங்கர்

11th Gen Intel Core Processors இனால் இயக்கப்படும் புதிய டெல் மடிக்கணினியை சிங்கர் ஸ்ரீலங்கா அண்மையில் வெளியிட்டதுடன் இது மடிக்கணினி அனுபவத்துக்கு ஒரு புதிய அடைவு மட்டமாக அமைத்துள்ளது.

நாட்டின் முதன்மையான நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக சிங்கர் ஸ்ரீலங்கா அங்கீகாரம் பெற்றுள்ளது. நாட்டின் முன்னணி கணினி விற்பனையாளர் மற்றும் டெல் மடிக்கணினிகளின் சந்தைப் பங்குகளின் முதல்வன் என்ற வெற்றியால் இலங்கையின் மடிக்கணினி சந்தையில் சிங்கரின் ஆதிக்கம் புலப்படுகிறது.

11th Gen Intel Core Processors ஆல் இயக்கப்படும் புதிய டெல் மடிக்கணினி வெளியீடானது புதிய தொழில்நுட்பம் மற்றும் வேகம் வினைத்திறன் போன்ற செயற்பாடுகளினால் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. ´டைகர் லேக்´ என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த ப்ரோஸசர் மெல்லிய மற்றும் கனம் குறைந்த மடிக்கணினிகளுக்கான உலகின் மிகச்சிறந்த ப்ரோஸசராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 11th Gen Processors ஆனது அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறன் மற்றும் விரைவான பிரதிபலிப்புப் போன்றவற்றுடன் சக்திமிக்க செயல்திறனைக் கொண்டிருப்பதாக இன்டெல் தெரிவிக்கிறது. இந்த ப்ரோஸசர் கம்பனியின் ஒருங்கிணைக்கப்பட்ட Intel Xe க்ரபிக்ஸ் அட்டையுடன் இணைந்ததாகக் காணப்படுகிறது. இது அதிவேக காட்சிகளை வழங்குவதுடன் க்ரபிக்ஸ் வடிவமைப்பாளர்கள் எடிட்டர்கள் மற்றும் விளையாட்டாளர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

இன்டெலின் புதிய Xe சிப் ஆனது நுகர்வோர் வெளிப்புற க்ரபிக்ஸ் அட்டையின்றி தமது மடிக்கணினியைப் பயன்படுத்த உதவுவதுடன் பல மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் பிரத்தியேக க்ரபிக்ஸ் அட்டையான Nvidia MX350 இன் செயல்திறனுக்கு சமமான செயற்பாட்டை புதிய இன்டெல் சிப் கொண்டுள்ளமை புதிய அளவுகோலாக அமைந்துள்ளது. இந்த சிறந்த க்ரபிக்ஸ் ஆதரவு மற்றும் செயல்திறன் என்பன உபயோகிப்பவர்கள் இதற்காகப் பிரத்தியேக க்ரபிக்ஸ் அட்டைகளைப் பயன்படுத்தாமல் சிறந்த காட்சிகளைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது. தற்பொழுதுள்ள டெல் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி சிங்கர் புதிய டெல் 3000 தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த அம்சங்களை வழங்குவதன் ஊடாக டெல் 3000 தொடர் மடிக்கணினிகள் தீர்க்கமான வடிவமைப்பு மாற்றத்துக்கு உட்பட்டிருப்பதுடன் 10th Gen 5000 தொடருக்கு சமமாகவும் அமைந்துள்ளன.

இது தவிரவும் டெல் 5000 தொடர் வடிவமைப்பின் அடிப்படையில் சீராக்கப்பட்டு சந்தையில் சிறந்த உயர்நிலை நுகர்வோர் மடிக்கணினி என்ற அதன் நிலையை மேலும் மேம்படுத்துகிறது.

செயல்திறனின் எல்லைகளை மீறி தொழில்துறையில் முன்னணியான XPS வரம்பெல்லையில் 11th Gen processors உடன் கூடிய முன்னணி டெல் மடிக்கணினிகளை சிங்கர் வழங்குகிறது. இது 2020ஆம் ஆண்டின் சிறந்த மடிக்கணினியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய 11th Gen ஆற்றலுடன் கூடிய XPS தொடருடன் டெல் இந்த சாதனையை 2021ஆம் ஆண்டில் மீண்டும் செய்வதை நோக்காகக் கொண்டுள்ளது.

சிங்கரின் வலுவான விநியோக வலையமைப்பின் ஊடாக 11th Gen டெல் மடிக்கணினிகள் நாடு முழுவதிலுமுள்ள நாநூறிற்கும் அதிகமான காட்சியறைகளில் கிடைக்கிறது. சிங்கரின் வாடகை கொள்முதல் திட்டமானது 11th Gen வலுவுடைய மடிக்கணினிகளை மிகவும் நியாயமான விலையில் வழங்குவதற்கான சிறந்த சலுகைகளை வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்குத் தனித்தனியான உபயோக அனுபவத்தை வழங்கும் நோக்கில் டெல் தயாரிப்புக்களை அணுகுவதற்கு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் மேம்பட்ட e-வர்த்தகத் தளம் (www.singer.lk) கவர்ச்சிகரமான சலுகைகளையும் வழங்குகிறது.

சவாலான ஆண்டாக இருந்தபோதிலும் டெல் மற்றும் சிங்கர் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டாண்மை மீண்டும் நிலையானதாக சாதகமான வளர்ச்சியுடன் வெற்றியடைந்துள்ளது. டெல் நிறுவனத்தின் தீர்வுகள் மற்றும் சிங்கரின் வேறுபட்ட மதிப்புள்ள பெறுமதி பரிமாணம் மற்றும் சேவைத் தரம் வளர்ச்சி வாய்ப்புக்களை விரைவுபடுத்துவதற்கும் 2021ஆம் ஆண்டில் அதிக வெற்றியை அடையவும் சிறந்த தளத்தை உறுதிசெய்கிறது.

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *