Latest News
Home / உலகம் / 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் விரைவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவை வெளியிடவுள்ளது.

இதன்படி, அந்நிறுவனம் தனது புதிய ரேட்டிங் முறையை பயன்படுத்தி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

செயல்திறன் சரியில்லாத 6 சதவீதம், சுமார் பத்தாயிரம் ஊழியர்களின் பணிநீக்கம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என கூறப்படுகிறது.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *