Latest News
Home / வாழ்வியல் / வேலைக்குப் போறதுல இத்தன பிரச்சனையா? அப்ப இதுதான் காரணம்..!

வேலைக்குப் போறதுல இத்தன பிரச்சனையா? அப்ப இதுதான் காரணம்..!

என்னதான் சூப்பரா இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணாலும் சிலசமயம் உங்கள் தகுதிக்கு குறைவான இடங்களில் கூட நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள். நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்த பின் ஏன் இந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இவை எல்லாம் கூட காரணமாக இருக்கலாம். அவற்றை அடையாளம் காண உதவுவதற்கு சில உதவிக் குறிப்புகள் உங்களுக்காக.!

ஸ்கில் மிஸ் மேட்ச்:

வானத்திற்கே வண்ணம் தீட்டும் திறமை இருந்தாலும் விண்ணப்பிக்கும் வேலைக்கு உங்கள் திறமை பொருத்தமாக உள்ளதா என்பதை சோதிக்க மறக்காதீர்கள். பல விண்ணப்பங்கள் தவறான ஸ்கில் செட் காரணமாக நிராகரிக்கப்படுகின்றன.

எழுத்துப்பிழை:

சுவற்றில் எறிந்த பந்து போல் ரெஸ்யூம் திரும்பி வரும் சிலசமயம், ஏன் என்று பார்க்கையில் எழுத்துப்பிழை, வடிவமைப்பு சிக்கல், 5 பக்க ரெஸ்யூம் போன்ற காரணங்களாக கூட இருக்கலாம். ரெஸ்யூம் என்றால் இரண்டு வரிகளில் பிரம்மிபூட்டும் புதுக்கவிதை போல இருக்க வேண்டும்.

பெர்ஷனாலிட்டி மிஸ் மேட்ச்:

வேலைக்கு தகுந்தாற் போல் சரியான ஆளுமையை வெளிப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஒரு கல்லூரியின் நிறுவனர் வேறுவகையில் சிந்திப்பார், பிரின்சிபால் வேறு வகையில் சிந்திப்பார். நீங்கள் எந்த பணி அல்லது பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அது தொடர்பான தனித்திறமைகளை வெளிகாட்டினால் பாஸ் மார்க்.

ஆர்வம் இன்மை:

ஆர்வம் என்பது வெற்றிக்கான கதைவை திறக்கும் சாவி போன்றது. ஒரு வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு, அது தொடர்பாக கேள்வி கேட்டால் அதுவா… பிடிக்காது, இதுவா… சேசே பிடிக்கவே பிடிக்காது என வேலை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஓராங்கட்டினால் அப்புறம் எப்படி ஆர்டார் வங்குவது.

நேர மேலாண்மை:

முதல் நாள் நேர்காணலுக்கே தாமதமாக வந்தால், இது நியாமா சார்… ஏன் வரக்கூடாதா என்று கேட்கிறீர்களா? நீங்கள் முதல் நாள் சொல்லும் கதை  சீரியல் போல் அனுதினமும் நீளாது என என்ன நிச்சயம் என பயம் வருமா வராதா. எனவே ஆன் டைம் எப்போதும் சிறப்பு.

தோற்றம்:

சில நேரங்களில் ஓவர் மேக்கப்பில் இன்டெர்வியூ செல்வது. கேஷியர் வேலைக்கு எதுக்கு கோட் சூட். ஆக என்ன வேலைக்கு போறோம் என்பது முக்கியம் அல்ல, எப்படி போறோம் என்பதுதான் முக்கியம். ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் தோற்றம் மிக முக்கியம்.

மோசமான கேள்விகள்:

நல்ல கேள்விகள் எப்போதும் சரியான ஆளை கைகாட்டுவதோடு, அவர்களுக்கு வேலையின் மேல் உள்ள ஆர்வத்தை வெளிக்காட்டும், தேவையில்லாத கேள்விகள் ஆர்வமின்மையைக் காட்டுவதாக அமையும். மேலும் நாம் இந்த வேலைக்கு தகுதியற்றவர் என்பதை காட்டிக்கொடுத்துவிடும்.

பதில்

நீங்கள் உண்மையிலே வேலைதேடுபவராகவோ, அல்லது வேலையை நேசிப்பவராகவோ இருந்தால் உடனடியாக வேலை தொடர்பான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களது தாமதமான பதில் ‘யூ ஆர் நாட் பிட்’ என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும்.

தகுதியற்ற சம்பள எதிர்பார்ப்பு:

நமது தகுதிக்கு ஏற்றார் போல் ஊதியத்தை கேளுங்கள், யார்டா கேக்குறா? அண்ணன்டா தன கேளு என்பது போல வரைமுறையில்லாமல் கேட்டால் அந்த வேலை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போக வாய்ப்புள்ளது.

ரெபரென்ஸ்

சில வேலைகளை பொருத்தவரை விதிவிலக்கு. மற்ற வேலைகளுக்கு முன்னர் பணியாற்றிய நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் பரிந்துரை என்பது இன்றியமையாதது. எனவே சக பணியாளர்களிடம் எப்போதும் அன்பு பாராட்ட தவறாதீர்கள்.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *