Latest News
Home / உலகம் / வட கொரியா 2022 இல் பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தும் – கிம்

வட கொரியா 2022 இல் பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தும் – கிம்

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இந்த ஆண்டு தேசிய முன்னுரிமையாக இருக்கும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சியின் முக்கிய கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறம் இருக்க வட கொரியாவில் தொடர்ந்தும் உணவு தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

இந்நிலையில் வளர்ச்சியை அதிகரிப்பதும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் முக்கியப் பணி என கிம் ஜாங் உன் தெரிவித்தார்.

மக்களுக்கான உணவு, உடை மற்றும் வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் அதேநேரம் கொரோனா தொற்றினை எதிர்த்துப் போராடுவதும் இந்த ஆண்டின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என அவர் கூறினார்.

இதேநேரம் அவரது உரையில் அமெரிக்கா அல்லது தென் கொரியா பற்றி நேரடியாக எந்த கருத்தையும் குறிப்பிடப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *