Latest News
Home / இலங்கை / ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் தொடர்பில் 3 வாரத்திற்குள் தீர்மானம்

ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் தொடர்பில் 3 வாரத்திற்குள் தீர்மானம்

நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டில் குற்றவாளியாக சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்க முடியுமா? அல்லது முடியாதா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை 3 வார காலத்திற்குள் தாம் அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேரவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபநாயகர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்

ரஞ்சன் ராமநாயக்கா தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முறையான சட்ட ஆலோசனையைப் பெற்று தமது தீர்மானத்தை அறிவிப்பதாகவும், இது தொடர்பில் எந்வொரு உறுப்பினரும் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 2 வாரத்திற்குள் அதனை கடிதம் மூலம் தமக்கு சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *