Latest News
Home / இலங்கை / மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்?

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்?

புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 அமைச்சர்கள் அடங்கியதாக இந்த புதிய அமைச்சரவை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் மேலும் 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதற்கமைய பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக காணப்படுகின்றது.

அதன்படி, நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர், சுசில் பிரேம ஜயந்த – கல்வி அமைச்சர், விஜயதாச ராஜபக்ஷ – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், ஹரீன் பெர்னாண்டோ – காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், கெஹலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர், ரமேஸ் பத்திரண – கைத்தொழில் அமைச்சர், மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், நளின் ருவான் ஜீவ பெர்னான்டோ – வர்த்தகம்இ வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர், டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சராக பதிவிப்பிமாணம் செய்துகொண்டனர்.

முன்னதாக தினேஷ் குணவர்தன – பொது நிர்வாக அமைச்சர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர், பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி அமைச்சர், காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் பதவிப்பரமானம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *