Latest News
Home / இலங்கை / மட்டக்களப்பில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை!

மட்டக்களப்பில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை!

மட்டக்களப்பில் கொரோனா தொற்று அதிகரிப்பு  பொலிஸார் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து விழிப்புணனர்வு முன்னெடுப்பு.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பொது சுகாதார திணைக்களம் பொலிசார் இணைந்து பொது போக்குவரத்து வாகனங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்ரிகர் ஓட்டும் நடவடிக்;கை ஒன்றை இன்று  (வியாழக்கிழமை ) மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைத்தனர்;.

இந்த கொரோனா தொற்று விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.என்.எஸ்.மென்டிஸ், பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கமைய மாவட்ட போக்குவரத்து பொலிசார் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.பி.ஏ.சரத்சந்திர  தலைமையிலான போக்குவரத்து பொலிசார் மற்றும் தேசிய இளைஞர்சேவை மன்ற மட்டக்களப்பு பணிப்பாளர் ஆலிதீன் கமீர், ஆகியோர் இணைந்து இந்த விழிப்பூட்டுதம் நடவடிக்கை பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்தனர்.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து போருந்து தனியார் போக்குவரத்து  பேருந்துகள் என்பவற்றில் இந்த  ஸ்ட்டிக்கர் ஓட்டும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *