Latest News
Home / ஆலையடிவேம்பு / பெருமிதத்துடன் வெற்றிகரமாக மூன்றாவது வருடத்தில் கால்தடம் எடுத்து வைக்கின்றது எமது Alayadivembuweb.lk இணையத்தளம்.

பெருமிதத்துடன் வெற்றிகரமாக மூன்றாவது வருடத்தில் கால்தடம் எடுத்து வைக்கின்றது எமது Alayadivembuweb.lk இணையத்தளம்.

”எமது ஊருக்கான எங்கள் ஒவ்வொருவரினதும் பிரதிபலிப்பின் அடையாளம் எம் இணையத்தளம் Alayadivembuweb.lk”

அம்பாறை மாவட்டத்தின் பசுஞ் சோலையும் செந்நெல் வயலுமாக திகந்த மருதம் நிலம் என சிறப்பிக்கப்படுகின்ற வரலாற்றுத்தொன்மையும் பாரம்பரியமும் மிக்க எமது ஆலையடிவேம்பின் சிறப்புக்களை உலகறியச்செய்யும் நோக்குடன் Alayadivembuweb.lk இணையத்தளம் ஓகஸ்ட் ஒன்று 2019 முதல் எமது ஊரின் நிகழ்வுகளை உடனுக்குடன் தாயக உறவுகளுக்கும் உலகெங்கும் பரந்துவாழும் எமது உறவுகளுடனும் பகிர்ந்து எமது உறவுகளின் இன்ப துன்பங்களின் பங்காளியாகவும் எமது அடையாளங்களைத் தாங்கி இணையவெளியில் செய்தித்தகவல் பரிமாற்ற இணையஊடகமாக Alayadivembuweb.lk இணையத்தளம் வெற்றிகரமாக தனது இரண்டாவது வருட நிறைவை பெருமிதத்துடன் பூர்த்தி செய்கின்றது.

எமது சமூகம் சார்ந்து கல்வி கலாச்சாரம் சமயம் சூழல் பொருளாதாரம் சுகாதாரம் பெளதிகவியல் கட்டமைப்புக்கள் என்று அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வெற்றிகரமாக மூன்றாவது வருடத்தில் கால்தடம் எடுத்துவைக்கின்றது Alayadivembuweb.lk இணையத்தளம்.

மேலும் Alayadivembuweb.lk இணையக்குழு உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். உங்களின் ஆலோசனைகளும் ஆதரவும் எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதுடன், எமது ஊடக சேவையை மேலும் பன்மடங்கு ஆக்கபூர்வமாக வழங்க உந்து சக்தியாக அமையும்.

-ஆலையடிவேம்பு வெப் ஊடக வலையமைப்பு-

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *