Latest News
Home / விளையாட்டு / புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த CSK!

புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த CSK!

மும்பையில் நடைபெற்ற பரபரப்பான டி20 ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்ற சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் விளாச, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சென்னை துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய டு பிளெசிஸ் ஆட்டநாயகன் ஆனார். தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியினால் தொடச்சியாக 3 ஆட்டங்களில் வென்றுள்ளது சிஎஸ்கே. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *