Latest News
Home / இலங்கை / பாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரையிலான இலங்கை போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல்….

பாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரையிலான இலங்கை போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல்….

வி.சுகிர்தகுமார்

நீண்ட காலமாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விநாயகபுரம் பாலக்குடா மக்கள் எதிர்கொண்டு வந்த போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வினை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைவாக இன்று குறித்த பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அவர் பாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரையிலான இலங்கை போக்குவரத்து பஸ் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திருக்கோவில் பிரதேச இணைப்பாளர் கே.மதி மற்றும் அக்கரைப்பற்று பிரதேச இணைப்பாளர் இ.சுவர்ணராஜ் இணைத்தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட விநாயகமூர்த்தி முரளிதரன் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் பஸ் சேவையினை நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையில் அம்பாரை மாவட்டத்தில் 100 மைதானங்களை புனரமைக்கவுள்ளதாகவும் திருக்கோவில் மற்றும் காரைதீவு வைத்தியசாலைகள் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார். இது தொடர்பில் பிரதமருடன் பேசி இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் சதிசேகரன் பிரதேச சபை தவிசாளர் இவி.கமலராஜன் இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *