Latest News
Home / வாழ்வியல் / பாதிப்புகள் என்ன பகல் நேரத்தில் தூங்குவதால்….

பாதிப்புகள் என்ன பகல் நேரத்தில் தூங்குவதால்….

பொதுவாக தூக்கம் என்பது மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்.

நாம் தூங்குவதால் உடல் ஓய்வு மட்டும் பெறுதில்லை. உடலுக்கு பல்வேறு வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.

ஆனால் சிலருக்கு தலை கீழாகக் குட்டிக்கரணம் அடித்தாலும் தூக்கமே வராது. அப்படி இருப்பவர்கள் பகலில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இருப்பினும் பகல் நேரம் தூங்குவதனால் ஒருசில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. தற்போது பகல் நேரத்தில் தூங்குவதால் பாதிப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • காலையில் சாப்பிடும் நேரம் தாண்டித் தூங்கிக் கொண்டிருப்பது அல்லது மதியம் முதல் மாலை வரை தூங்குவது போன்ற செய்கைகளால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு விடும். அதனால் தேவையில்லா நோய்கள் உடலைத் தாக்கலாம்.
  • இரவு நேரம் வெகு நேரம் வரை வேலை செய்வதால் உடல் சூடு அடையும். இதனால் பல்வேறு வியாதிகளைச் சந்திக்க நேரும். குறிப்பாக கண்களும், மூளையும் தாக்கப்படும்.
  • காலை நேரத்தில் தூங்குவதால் இளஞ்சூரிய வெயில் உடலில் பட வாய்ப்பு ஏற்படாது. இதனால் இவர்களுக்கு விட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும். ஆக இயற்கையாக பெற இயலும் ஒரு சத்தை, காலை நேர தூக்கம் கிடைக்காமல் செய்துவிடும்.
  • தாமதமாக எழும் பொழுது தேவையில்லாத மன அழுத்தங்கள், மனக் குழப்பங்கள் ஏற்படும். ஒரு ஒழுங்கான தூக்க முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
  • வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு காலையில் படுக்கவே கூடாது.இதனால் செரிமான பிரச்சனை,உடல் எடை அதிகரித்தல் போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *