Latest News
Home / இலங்கை / தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம்!

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக “தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையம்“ ஒன்றை நிறுவியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காக இராஜகிரிய தேர்தல் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு கட்சி/குழு/வேட்பாளர் அல்லது எந்த நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகளை இங்கு பதிவு செய்ய முடியும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகவும் தெரிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Telephone Number – 011 2860056, 011 2860059, 011 2860069

Fax Number – 011 2860057, 011 2860062

Viber/ WhatsApp – 0719160000

E-mail – electionedr@gmail.com

Facebook – Election Commission of Sri Lanka, Tell Commission – Election Commission of Sri Lanka

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *