Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பிரதேசத்தில் நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட 175 ஏக்கர் நெற் செய்கையின் அறுவடை விழா!

திருக்கோவில் பிரதேசத்தில் நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட 175 ஏக்கர் நெற் செய்கையின் அறுவடை விழா!

வி.சுகிர்தகுமார்  

 கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில்; நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட  175 ஏக்கர் நெற் செய்கையின் அறுவடை விழா தமிழர்களின் பாரம்பரிய முறையில் நேற்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளும் நெற் செய்கையினை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் முகமாக ஹெலசுவய நிறுவனமும் தம்பிலுவில் கமநல சேவைத் திணைக்களமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொண்ட நெற்செய்கை அறுவடை நிகழ்வுகள் சேனைக்காடு வயல் பிரதேசத்தில் இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் ஹெலசுவய நிறுவனத்தின் இணைப்பாளர் தேவரஜனி ஒருங்கிணைப்பின் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

இதன்போது அதிதிகளுக்கு மாலை அணிவித்து பாரம்பரிய முறையில் பாரம்பரிய இசைக்கருவி வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு இந்து கிருஸ்தவ மத அனுஷ்டானங்களுடன் நெல் அறுவடை விழா ஆரம்பமானதுடன் நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையிலான நெற்செய்கை தொடர்பில் மாணவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து விநாயகபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ஸ்ரீ ஆறுமுக கிருபாககர சர்மாவினால் சூரிய பகவானுக்கு பூஜைகள் இடம்பெற்றதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஹெலசுவய நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் வி.கே.சேனநாயக்க ஆகியோரால் சம்பிரதாய ரீதியாக நெல் அறுவடை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்னர் பாரம்பரிய முறைமைகளினுடாக நெல் சாகுபடி இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து அதிதிகளினால் தமிழ் சிங்கள் மக்களின் பாரம்பரிய விவசாய முறைகள் தொடர்பாகவும் சிறப்புரைகளும் இடம்பெற்று இருந்தன.

திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஹெலசுவய நிறுவனத்தின் உயர் பீட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *