Latest News
Home / உலகம் / தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு!

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு!

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கனடாவின் ‘மெடிகாகோ’ உயிரிதொழில் நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயற்பட அவற்றுடன் ‘ஏஎஸ் 03’ என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை 85 மையங்களில் 24 ஆயிரத்து 141 பேரிடம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டதில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எவருக்கும் தீவிரமான கொரோனா தொற்று ஏற்படவில்லை.

இந்த பரிசோதனையில் தடுப்பூசி, 5 வகை உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 69.5 சதவீத செயல் திறன் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அறிகுறிகளுடன் கூடிய கொரோனாவுக்கு எதிரானதாகும்.

மிதமான கொரோனாவுக்கு எதிராக 78.8, சதவீதமும், கடுமையான கொரோனாவுக்கு எதிராக 74 சதவீதமும் செயல்திறன் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த தடுப்பூசி பற்றிய ஆய்வுத்தகவல்கள் ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *