Latest News
Home / இலங்கை / தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை

தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை

ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தற்போதைய சூழ்நிலையில் முடியாது என்பதே அரசாங்கத்தில் நிலைப்பாடாகுமென்று கல்வி அமைச்சரினால் இன்று ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், அதிபர் சம்பளக் கொடுப்பனவு, அரச ஊழியர்களின் நெருக்கடி என்பன பற்றி அடுத்த வரவு – செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அரசியல் ரீதியாக வீழ்ச்சி கண்டவர்கள் ஆசிரியர், அதிபர் நெருக்கடியை பாலமாக பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். குறுகிய நோக்கங்களுக்காக ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலினால் சகல நாடுகளும் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை போன்று இலங்கையும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நாடுகள் ஊழியர்களுக்கான சம்பளத்தை 50 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிமை குறிப்பிடத்தக்கது.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *