Latest News
Home / உலகம் / தமிழகத்தில் எட்டு மாதங்களின் பின்னர் கல்லூரிகள் நாளை திறப்பு!

தமிழகத்தில் எட்டு மாதங்களின் பின்னர் கல்லூரிகள் நாளை திறப்பு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், எட்டு மாதங்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படவுள்ளன.

கடந்த மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த போதிலும், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடைபெற்றதுடன் வகுப்புகளும் இணையம் ஊடாக நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் திகதி கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதித்த போதிலும், கொரோனா சூழ்நிலையால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

எனினும், ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு மட்டும் நாளை முதல் நேரடியாக வகுப்புகள் நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதுடன் இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் ஏழாம் திகதி முதல் நேரடி வகுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *