Latest News
Home / சுவாரசியம் / டுவிட்டரில் பெண்கள் எதைப் பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் தெரியுமா?

டுவிட்டரில் பெண்கள் எதைப் பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் தெரியுமா?

டுவிட்டரில் பெண்கள் எதைப் பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன.

சர்வதேச பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்பது ஆராயப்பட்டது.

இதற்காக 700 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2019 ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 10 நகரங்களில் பெண்கள் வெளியிட்ட 5 லட்சத்து 22 ஆயிரத்து 992 பதிவுகளும் ஆராயப்பட்டன.

இதில் பெண்கள் டுவிட்டரில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவது தெரிய வந்துள்ளது. பெண்களின் டுவிட்டர் பதிவுகள் 9 பொருளை பிரதானமாக கொண்டுள்ளன.

பெண்களின் டுவிட்டர் பதிவுகளில் 24.9 சதவீதம், பேஷன், புத்தகங்கள், அழகு குறிப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சாப்பாடு பற்றி அமைந்துள்ளன. மேலும் நாட்டு நடப்புகள் பற்றி 20.8 சதவீத பதிவுகள் அமைந்திருக்கின்றன.

அதேபோல் கொண்டாட்ட தருணங்கள் தொடர்பாக 14.5 சதவீத பதிவுகள் செய்யப்படுகின்றன. சமூகம் தொடர்பாக 11.7 சதவீத பதிவுகளும், சமூக மாற்றங்கள் குறித்து 8.7 சதவீத பதிவுகளும் உள்ளன.

டுவிட்டரை பொறுத்தமட்டில் அன்றாட உரையாடல்கள், கொண்டாட்ட தருணங்கள்தான் அதிகபட்ச லைக்குகளையும், பதில்களையும் பெறுகின்றன.

Check Also

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *