Latest News
Home / இலங்கை / செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கைப் பெண்!!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா விண்கலத்தை வடிவமைத்த இலங்கைப் பெண்!!

பிராங்கோ-அமெரிக்க கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது.

மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற பணியை அது அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பண்டைய உயிர் வாழ்க்கையின் சுவடுகளை லேஸர் மூலம் ஆய்வு செய்து தரவுகளை அது உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இந்த விண்கலத்தை வடிவமைக்கும் முக்கிய பணியில் இலங்கையை சேர்ந்த பொறியிலாளர் மெலனி மகாராச்சி பணியாற்றியுள்ளார்.
Mars 2020 Perseverance என்ற ரோவர் விண்கலத்தின் உள்ளக மின் அமைப்பினை மெலனி மகாராச்சி வடிவமைத்துள்ளார்.

2003ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மெலனி மகாராச்சி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு அவர் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கத்தில் முடித்தார்.

இன்று உலகையே தன்வசம் திரும்பி பார்க்க வைத்துள்ள Tesla நிறுவனத்தின் SpaceX திட்டத்தில் பணிபுரிந்த அவர் பின்னர் போஜிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

2015ம் ஆண்டு நாசாவின் குலுக்கல் முறையில் தெரிவான மெலனி மகாராச்சி, Mars 2020 Perseverance திட்டத்தின் “designed the internal electrical” குழுவில் இடம்பிடித்தார்.

இதேவேளை, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ரோவர் விண்கலத்தின் ஆய்வு நடவடிக்கையில் இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி, டொக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *