Latest News
Home / உலகம் / செயற்கைக்கோள்களை இலக்கு வைக்கும் ரஷ்யா: அமெரிக்கா, பிரித்தானியா மீண்டும் குற்றச்சாட்டு!

செயற்கைக்கோள்களை இலக்கு வைக்கும் ரஷ்யா: அமெரிக்கா, பிரித்தானியா மீண்டும் குற்றச்சாட்டு!

விண்ணில் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்களை இலக்கு வைக்கும்படியான ஏவுகணை போன்ற ஆயுதம் ஒன்றை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை ரஷ்யா சோதனை செய்ததாக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ராணுவங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்ய ஆயுதம் செயற்கைக் கோள்களைத் தாக்கும் அமைப்பை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வெளிவிவகாரத் துறை இதனை விபரித்துள்ளது.

எனினும் ரஷ்ய விண்வெளி உபகரணங்களை சோதிக்க புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்திருந்தது.

ரஷ்ய செயற்கைக்கோளின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே அமெரிக்கா கவலை எழுப்பியிருந்தது. விண்ணில் இயங்கும் இத்தகைய கருவிகளை சோதிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் விண்வெளிப் பொருட்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் ரஷ்யாவின் இராணுவக் கொள்கையுடன் ஒத்திருப்பதாக அமெரிக்க விண்வெளிப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெனரல் ஜே ரேமண்ட் தெரிவித்துளார்.

இதேநேரம், தற்போது முதன்முறையாக இதேபோன்ற குற்றச்சாட்டை பிரித்தானியாவும் முன்வைத்துள்ளது. இது விண்வெளி சோதனை என்று ரஷ்யா கூறிவரும் நிலையில், இந்த ஏவுகணையானது ஆயுதங்கள் போல இருப்பதாக, அதாவது ஓர் ஆயுதத்திற்கான பண்புகளைக் கொண்டிருப்பதாக  பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் ஆய்வுத் தகவல்களை ரஷ்யா அரசாங்கத்துக்கு ஆதரவான ஹெக்கர்கள் ஊடுருவியதாக ஏற்கனவே குறித்த நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *